|
என்றார். ஆழியும்
என்பதில் உள்ள உம்மை தேரேயன்றிச் சக்கரங்களும்
பொன்னாற் செய்யப் பட்டன என்பதை விளக்குவதற்கு வந்தது : இறந்தது
தழுவிய எச்சம்.
(101)
| |
காடு
மலை சாரல் காவலன் கடத்தல் |
| 206. |
வானமுற்
றெழுந்தமா மலையு மால்கரித்
தானமுற் றொழுகிய தடமும் சாரலும்
நானமுற் றெழுநறும் பொழிலும் நண்ணிவெங்
கானமுற் றெருநெறி கடந்து போயினான். |
(இ - ள்.)
வானம் உற்று எழுந்த மா மலையும் மால் கரித் தானம்
உற்று ஒழுகிய தடமும் சாரலும் - ஆகாயத்தைத் தொட்டுக்கொண்டு
உயர்ந்த பெரு மலைகளும் பெரிய யானைகளுடைய மதம் பொருந்திய
ஒழுகும் இடங்களும் மலைப்பக்கங்களும், நானமுற்று எழும் நறும்
பொழிலும் நண்ணி - கத்தூரி மணம் பொருந்தி வீசும் நறுமணச்
சோலைகளும் கடந்துபோய், வெம் கானம் உற்று அறநெறி கடந்து
போயினான் - வெப்பமான காடுகள் அடர்ந்த கடத்தற்கரிய வழி கடந்து
போனான்.
மாமலை : உரிச்சொற்றொடர். யானைகள் தங்கியதால்
மதநீர்
ஒழுகிய இடங்கள் பல இருந்தன என்பது தோன்ற 'தானமுற்றொழுகிய
தடமும்' என்றார். தடம் - இடம். ஆடவர் மகளிர் அணிந்த
கத்தூரிக்குழம்பு வழிந்து அதன் மணங்கமழ்ந்தது சோலை என்பது விளங்க
'நானமுற்று எழு நறும் பொழில்' என்றார். நானம் - கத்தூரி; நாவி என்பர்.
(102)
| |
பாலைவனத்தைப்
பார்த்திபன் காணல் |
| 207. |
விரிந்தவெங் கமர்களும் வெயிலின் வெந்துகீழ்
சரிந்தமா மலைகளும் சருகு வெந்துமேற்
பொரிந்தமா மரங்களும் புகைந்து பார்மிசை
எரிந்தெழு கடுஞ்சுரத் தெல்லை எய்தினான்.
|
(இ
- ள்.) விரிந்த வெம் கமர்களும் - வெப்பத்தால் விரிந்த நிலப்
பிளப்புகளும், வெயிலின்வெந்து கீழ் சரிந்த மா மலைகளும் - வெயிலால்
வெந்து கீழே சரிந்து கிடக்கிற பெரிய மலைகளும், சருகு வெந்து மேல்
பொரிந்த மா மரங்களும் - சருகுகள் கருகி மேலே பொரிந்திருக்கிற
பெரிய மரங்களும், பார் மிசை புகைந்து எரிந்து எழு கடும் சுரத்து எல்லை
எய்தினான் - தரையில் புகையுடன் எரிந்து கானல் எழுகின்ற கடுமையான
பாலைவனத்தின் எல்லையை அடைந்தான் (அரிச்சந்திரன்).
கமர்
- நில வெடிப்பு. பாலை வனத்தில் நிலவெடிப்பும், வெயிலா
லுருகிச் சரிந்த மலைகளும் சருகாயுலர்ந்த மரங்களும் இருந்தன எனக்
கொள்க.
(103)
|