|
| |
பாலைவனச்
சிறப்பு
அறுசீர்ச் சந்த விருத்தம்
|
| 208. |
என்றும்அம
ரர்க்குவினை யின்றிஅரன் முப்புரம்
எரித்த கனலும்
வென்றிமத னைப்பொடி படத்திரு நுதற்கணை
விழித்த கனலும்
வன்றிரை எறிந்தெழு கடற்குள்நடு வைத்தவட
வைக்கன லும்உற்
றொன்றுபட வந்துகுடி கொண்டவண் உறைந்தன
வுருப்பம் எழவே. |
(இ
- ள்.) என்றும் அமரர்க்கு வினை இன்றி அரன் முப்புரம்
எரித்த கனலும் - இன எந்நாளும் தேவர்க்குத் துன்பம் நேராதபடி சிவன்
திரிபுரத்தை எரித்த தீயும், வென்றி மதனைப் பொடி படத் திருநுதற் கணை
விழித்த கனலும் - வெற்றியையுடைய மன்மதன் பொடியாகும்படி அழகிய
நெற்றிக்கண்ணைத் திறந்து நோக்கியதால் விளைந்த தீயும், வன் திரை
எறிந்து எழு கடற்குள் - வலிய அலைவீசி எறிகின்ற கடலில், நடு வைத்த
வடவைக் கனலும் - நடுவே வைக்கப் பட்டிருக்கும் வடவை முகத் தீயும்,
உற்று ஒன்றுபடவந்து - (ஆகிய முத்தீயும்) ஒன்றாய்ச் சேர்ந்து வந்து, குடி
கொண்டு உருப்பம் எழு அவண் உறைந்தன - நிலைபெற்றிருந்து வெப்பம்
வீசும்படி அங்குத் தங்கின.
அமரர்
- மரணமில்லாதவர் : காரணப்பெயர், உம்மைகள்
எண்ணுப்பொருளன. ஏகாரம் : ஈற்றசை. பாலைவனத்தின்
வெப்பத்தை
அம் மூன்று வகையான நெருப்பும் ஒன்றாகக் கூடியுறைந்தனபோல்
இருந்தது எனச் சிறப்பித்தார்.
(104)
| 209. |
கானமுழு
தும்தெறு கனற்றிரளில் வெந்தெழு
கதிர்ச்சுட
ரின்வெந்
தூனமுற வற்றிஉர கத்தலை வெடிப்பவதன்
உச்சி
வழிபோய்
வானள வெழுந்துபுவி மீதுவிழு கின்றமணி
வந்த
பகல்வான்
மீனம்விழு கின்றபடி யாமென விளங்கின
வெளிப்
புறமெலாம். |
(இ - ள்.)
கானம் முழுதும் தெறு கனல் திரளில் வெந்து எழுகதிர்ச்
சுடரின் வெந்து - காடு முழுவதையும் எரிக்கின்ற தீயின்
தொகுதியைப்போல வெந்து எழுகின்ற சூரியனுடைய ஒளி வெயிலால்
கருகி, ஊனமுற வற்றி - பழுதாகும்படி வற்றிப்போன, உரகத் தலை
வெடிப்ப - பாம்பின் தலை வெடிப்ப, அதன் உச்சி வழி போய் வான்
அளவு எழுந்து - அதன் உச்சி வழியாகப் போய் வானம் வரை உயர்ந்து,
புவிமீது வந்து விழுகின்ற மணி -
|