பக்கம் எண் :


107

மண்மேல் வந்து விழுகின்ற மணிகள், வெளிப்புறம் எலாம் - அந்தப்
பாலைநில வெளியிடம் எல்லாம், பகல் வான் மீனம் விழுகின்ற படியாம்
என விளங்கின - பகலில் விண் மீன் விழுகின்ற தன்மை போல விளங்கின.

     (இ - ள்.) மீனம் -அம் : சாரியை; கனல் + திரள் - கனற்றிரள்;
பாலையில் உள்ள பாம்புகள் சூரியவெப்பத்தால் உடல் கருகி அவற்றின்
உச்சியில் இருந்த நாகமணிகள் வெடித்து வான் வரை சென்று கீழே விழுந்
தோற்றம் பகலில் வானினின்று விழும் விண்மீன்கள் போலத் தோன்றின.
                                                    (105)

 
210. கரும்புயல் அருந்துளி கரந்துடல் கரிந்தயல்
   கலைந்து நெடிதாய்
வரும்பரு வமும்தலை மயங்கிமழை என்பது
   மறந்த வதனால்
பெரும்புவி பிளந்ததி லனந்தன்முடி யிற்சுடர்
   பிறங்கி எழுமால்
இரும்புலி சினந்தழல் உமிழ்ந்தவத னைச்சுட
   வெழுந்த தெனவே.

     (இ - ள்.) கரும் புயல் அருந் துளி கரந்து உடல் கரிந்து அயல்
கலைந்து - கரிய மேகங்கள் அருமையான மழைத்துளிகளை மறைத்து
உடல் கருகி அந்நிலத்துக்கு அப்பால் போய்க் கலைந்து, நெடிதாய் வரும்
பருவம் தலை மயங்கி - நீண்ட காலமுள்ள கார்ப்பருவமும் பிறழ்ந்து,
மழை என்பது மறந்த அதனால் - மழை பெய்வதை மறந்து விட்டபடியால்,
பெரும் புவி பிளந்து - பெரிய நிலம் வெடித்து, அதில் அனந்தன் முடியில்
சுடர் - அதிலுள்ள ஆதிசேடனது தலையிலுள்ள மணி ஒளியானது, இரும்
புவி சினந்து அழல் உமிழ்ந்த அதனைச் சுட எழுந்தது என - பெரிய
பூமியானது கோபித்து தீக்கக்கிய அதனைச் சுடுவதற்கு எழுந்ததுபோல,
பிறங்கி எழும் - விளங்கி மேல் எழும்.

     பெரும் புவி அனந்தன் உமிழ்ந்த அதனைச் சுட எழுந்தது எனப்
பிறங்கி எழும் எனக் கூட்டுக. ஆல் : அசை. இரும் புவி : பண்புத்தொகை.
நிலம் பிளந்து அதன் வழியாகச் சேடன் முடி ஆயிரத்திலுள்ள மணியொளி
பரந்து வெளிவந்த காட்சியானது நிலம் தன்மேல் கடுங் கதிர் பரப்பிய
சுடரோனைச் சினந்து சுடுவதற்கு வந்ததுபோலத் தோன்றிது என்க. இது
தற்குறிப்பேற்றம்.
                                                   (106)

 
211. சுரப்புறு சிறைப்புனல் எனக்கருதி வற்றிய
   துவட்சி யதனால்
நிரப்புறு தவிப்பினை ஒழித்திட மனத்தினி
   னினைத்து ழையெலாம்
இரப்பவரை நித்தலும் நடத்தியும்ஓர் அற்பமும்
   இரக்க மிலர்பால்
பரப்பவரை ஒத்தன கரப்பவரை ஒத்தன
   பசாச ரதமே.