|
(இ
- ள்.) உழை எலாம் - மான்கள் எல்லாம், வற்றிய துவட்சி
யதனால் நிரப்புறு தவிப்பினை ஒழித்திட மனத்தினில் நினைத்து - நீரின்றி
உடல் வற்றிப்போன தளர்ச்சியினால் நிரம்ப உண்டாசிய தண்ணீர்
வேட்கையை நீக்க எண்ணி, பசாச ரதம் - பேய்த்தேராகிய கானலை,
சுரப்புறு சிறைப் புனல் எனக் கருதி - நீர் சுரக்கும் குளம் என
மயக்கமாகக் கருதி நடத்தலால், இரப்பவரை நித்தலும் நடத்தியும் ஓர்
அற்பமும் இரக்கம் இலர்பால் பரப்பவரை ஒத்தன - ஏற்போரை
நாடோறும் அலைந்து ஒருசிறிதும் ஈயாத இரக்கமில்லாவதிடத்து
நெடுந்தூரம் அலைந்து செல்பவரைப் போன்றன. பசாச ரதம் கரப்பவரை
ஒத்தன - பேயத்தேர் இரப்பவர்க்குப் பொருளை மறைப்பவரைப் போன்றன.
மான்கள்
ஈயாத வன்னெஞ்சரிடை இரப்பதற்குச் செல்பவரைப்
போன்றன. பேய்த்தேர் பொருளைத் தருவதாகக் கூறி மறைப்பவரைப்
போன்றது. உவமை யணி. மான் பேய்த்தேரை நீரென மயங்கினமையின்
மயக்க அணி. சிறைப் புனல் - குள நீர். "சிறை செய்ய நின்ற செழும்
புனல்" சிவஞானபோதம். உழை : பால்பகா அஃறிணைப்பெயர். பசாச ரதம்
ஒத்தன : பால்பகா அஃறிணைப்பெயர்.
"இரப்பவர்க்கு
யாங்கொளிக்குங் கொல்லோ கரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்"
"இரந்தும்
உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்."
ஏகாரம் :
ஈற்றசை. 'நடத்தலால்' என்பது அவாய்நிலையாய் வந்தது.
(107)
| 212. |
அடுந்திறலும்
அவ்வவர் படுந்திறலும் நாமமும்
அனைத்தும்
எழுதி
நடுங்கலும் நறும்புனல் தவிர்ந்துடல் பதைத்துயிர்
நடுங்கி
உழலும்
கொடுங்கரி மருப்பும் வெருள் கல்திடரும் மற்றுள
குவட்டி
னிடையும்
நெடுங்கடல் தடந்திரை கிளர்ந்தென முழுங்குறு
நெடித்
திரளெலாம். |
(இ - ள்.)
அடுந் திறலும் அவ்வவர் படுந் திறலும் நாமமும்
அனைத்தும் எழுதி நடும் கலும் - பகைவரைக் கொல்லுந் திறனும் அவர்
அவர் போரில் இறந்த வீரமும் பெயரும் எழுதப்பெற்ற நடு
கல்லினிடையிலும், நறும் புனல் தவிர்ந்து உடல் பதைத்து உயில் நடுங்கி
உழலும் கொடுங் கரி மருப்பும் - நன்னீர் பெறாது உடல் பதைத்து உயிர்
நடுங்கி வருந்தும் வலிய யானைக் கொம்புகளினிடையிலும், வெருள் கல்
திடரும் - அச்சத்தைத் தரும் கல் நெருங்கிய மேடுகளிலும், மற்றுள்ள
குவட்டி னிடையும் - மற்றுமுள்ள குன்றுகளினிடத்தும், நெடும் கடல் தடம்
திரை கிளர்ந்தது என - பெரிய கடலின் பேரலைகள் பொங்கி
ஒலிப்பதுபோல், நெடித் திரள் எலாம் முழங்குறும் - சில்வண்டுகளின்
கூட்டமெல்லாம் முழங்கி ஒலிக்கும்.
|