|
(இ
- ள்.) மண் மகள் உடுத்த தீரை வாரி வடவைக் கனலை
மாற்றி - நிலமடந்தை ஆடையாக உடுத்த அலைகடலிலுள்ள வடவைத்
தீயை யொழித்து, இதில் ஓர் வெண் மணலை வைக்கில் - அவ்விடத்தில்
இப் பாலையின் ஒலு வெண் மணலை வைத்தால், அரமங்கையர்
இரும்பதியும் வெந்து விடும் - அரம்பையர் வாழ்கின்ற விண்ணுலகும் அந்த
மணற்சூடு தாக்கி வெந்து விடும் : கண் முழுதையும் புடை பெயர்ந்து உக
வரும் கடை யுகத்தில் - இடம் முழுமையும் பெயர்த்து அழிக்க வருகின்ற
ஊழி முடிவில், இதில் ஓர் றுண் மணல் தெறித்து விழினும் - இப்
பாலையின் ஒரு சிறு மணல் துகள் தெறித்து விழுந்தாலும், பிரளயப்
புனலை நுங்கிவிடும் - ஊழி வெள்ளத்தைக் குடித்துச் சுவறச் செய்யும்.
பதியும்
: உம்மை சிறப்பும்மை. ஆல் : இரண்டும் அசை. அக்
கடலினீர் வற்றி விடுவதுமன்றி விண்ணுலகும் வெந்துவிடும் எனக் கொள்க.
வடவை என்னுந் தீக் கடலின் நடுவில் இருப்பது. அது கடனீர் பொங்கி
மேலெழுந்து உலகத்தை யழிக்காமற் றடுத்து நிற்கின்றது என்று கூறுவர்.
(110)
| 215. |
வெங்கதிர்
தெறும்கொடிய விண்டுவனம் வெந்தெரியும்
வெந்தழ லின்வாய்
அங்கதம் இறந்துமத குஞ்சரம் இறந்துட
லழிந்திட மெலாம்
செங்குருதி அம்கடலின் மண்டமுது வாரிஅலை
சிந்து நுரைபோல்
எங்கணும் விளங்குவன வெண்குவ டெனும்பரி
செலும்பு மலையே.
|
(இ
- ள்.) வெம் கதிர் தெறும் கொடிய விண்டு வனம் வெந்து
எரியும் வெந்தழலின் வாய் - சூரியன் எரிக்கின்ற கொடிய மூங்கிற் காடு
மரங்கள் உராய எரிகின்ற வெந்தீயில், அங்கதம் இறந்த மத குஞ்சரம்
இறந்து உடல் அழிந்து - பாம்புகளும் இறந்து மத யானைகளும் இறந்து
உடல் வெந்து, இடம் எலாம் செங்குருதி அம் கடலின் மண்ட -
அவ்விடங்களில் எல்லாம் செந்நிற இரத்தம் அழகிய செங்கடல்போல
பெருக, முது வாரி அலை சிந்து நுரைபோல் - பழமையான கடல்
அலையின் நுரைபோல், வெண் குவடு எனும் பரிசு - வெள்ளை மலைகள்
என்று சொல்லும்படி, எலும்பு மலை எங்கணும் விளங்குவன - எலும்பு
மலைகள் எல்லா இடங்களிலும் தோன்றும்.
இரத்தம்
கடல்போல் பெருகி எலும்பு மலைகளாகக் குவிந்தது
என்பதாம். எலாம் : தொகுத்தல் விகாரம். இடம் : பால்பகா
அஃறிணைப்பெயர். வெங்கதிர் : பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை; முது வாரி : பண்புத்தொகை. நுரை எலும்புகளின்
நிறத்திற்கும் மலை குவியலுக்கும் உவமையாயின. மத குஞ்சரம் : இறந்தது
தழுவிய எச்ச உம்மை தொக்கது. மங்கதம் இறந்து : எதிரது தழுவிய எச்ச
உம்மை தொக்கது. வெந்தழல் : பண்புத்தொகை. வாய் : ஏழுனுருபு.
(111)
|