| |
காளி
தேவியின் இயல்பு |
| 216. |
வெங்கரி
உரித்திடை புனைந்தவள் சலம்கலை
விளங்கு சடிலச்
சங்கரித்ரி சூலதரி தாருகவி நாசனி
சவுந்தரி செழும்
பொங்கரி மணிப்பரி புரத்திரு பதத்தினள்
பொருப் பனதனத்
தெங்கடனி நாயகி இருந்தசம யத்தியல்
பெடுத்துரை செய்வாம். |
(இ
- ள்.) வெங் கரி உரித்து இடை புனைந்தவள் சலம் கலை
விளங்கும் சடிலச் சங்கரி - கொடிய யானையை உரித்து அதன் தோலை
அரையில் உடுத்தியவளும், கங்கையும் சந்திரனும் விளங்குகின்ற
சடையையுடையவளும் ஆகிய சங்கரி, திரிசூலதரி - மூவிலைச் சூலத்தைத்
தரித்தவளும், தாருக விநாசனி - தாருகாசுரனை அழித்தவளும், சவுந்தரி -
இயற்கை அழகு வாய்ந்தவளும், செழும் பொங்கு அரி மணி பரிவுரத் திருப்
பதத்தினள் - பேரொளி வீசும் பச்சைக்கற் பரல் அமைந்த சிலம்பணிந்த
திருவடிகளை யுடையவளும், பொரும்பன தனத்து - மலைபோன்ற
தனங்களை யுடையவளுமாகிய, எங்கள் தனி நாயகி - எங்கள் ஒப்பற்ற
குலத்தெய்வமாகிய உமாதேவியாகிய காளி, இருந்த சமயத்து இயல்பு
எடுத்து உரை செய்வாம் - அங்கு எழுந்தருளியிருந்த இலக்கணத்தை
எடுத்து மொழிவாம்.
சிவன்
செய்யும் செயல்கள் எல்லாம் சத்தி மூலமாகச் செய்தலினாலும்,
சிவனது இடப்பாகத்தில் சத்தி யிருத்தலினாலும் சிவனுக்குரிய செயல்களும்
சிவனது உருவத்தில் தரிப்பனவும் சத்திக்கும் உரியன.
(112)
| |
அரவப்பணி
மணியொளிக் காட்சி |
| 217. |
எறித்தசெ
ழுமுச்சுட ருமொத்தொரு தலத்திடை
எழுந்த தெனவே
தெறித்திரு புறக்கடை சிவத்திடை கறுத்தகண்
மிகச்சு ழலவே
சிறுத்தவி டையிற்கர தலத்தின்மு டியிற்றிகழ்
செறித்த அரவப்
பொறிக்கண பணத்தலை மணிச்சுடி கையிற்கதிர்கள்
பொங்கி விழவே. |
(இ - ள்.)
எறித்த செழு முச்சுடரும் ஒத்து ஒரு தலத்திடை
எழுந்தது என - ஒளிநிரம்பிய ஞாயிறு திங்கள் தீயாகிய மூன்று தீப்
பிழம்புகளும் ஒப்ப ஒரே இடத்தில் எழுந்ததுபோல, செறித்து இரு
புறக்கடை சிவந்து செறிந்து விளங்கி இருபக்கங்களிலும் கடைக் கண்களில்
சிவந்து, இடை கறுத்த கண் - நடுவில் கறுப்பான கண்கள், மிகச் சுழல -
மிகவும் சுழன்றுகொண்டிருக்க, சிறுத்த இடையில் கரதலத்தில் முடியில் -
சிறிய
|