|
ஒடுங்கிய இடையிலும்
கைகளிலும் தலையிலும், திகழ் செறித்த அரவம் -
விளங்குகின்ற நிறைந்த பாம்புகளின், பொறிக் கணம் பணத் தலை
மணிச்சுடிகையில் - புள்ளிகளைக் கூட்டமாகவுடைய படங்களின்
தலைகளிலுள்ள மணிகள் பொருந்திய உச்சிக்கொண்டைகளில், கதிர்கள்
பொங்கி விழ, ஒளிக் கதிர்கள் மிக்கு வீச;
இச்செய்யுள்
குளகம், செழு முச்சுடர் : பண்படுக்கு : மூச்சுடர் -
மூன்று + சுடர்; சுடர் : ஆகுபெயர்; உவமையணி புறக்கடை :
இலக்கணப்போலி; சிவந்து + இடை - சிவத்திடை, மென்தொடர் மொழியுட்
சில வேற்றுமையில் தம்மின வன்தொடர் ஆகா மன்னே; சுழலவே :
ஏகாரம் : அசை.
(113)
| |
திருமுகம்
தனம் இடை கடிதடச் சிறப்பு |
| 218. |
மிடித்தவர்
களைப்பொருள் மிகுத்தவர் வினைத்தொழில்
விளைப்ப தெனவே
கொடிப்படர் பொருப்பென இடைக்கிடர் விளைத்தன
கும்ப வழகும்
தடித்தின டிநிற்கும்இ ரதத்தைநி கர்பொற்கடி
தடத்தி னழகும்
பொடித்தெழு வெயர்த்திரு முகத்தழ குமுற்றொளி
பொழிந்தொ ழுகவே. |
(இ - ள்.)
மிடித்தவர்களைப் பொருள் மிகுத்தவர் வினைத்தொழில்
விளைப்பது என - வறுமையுற்றவர்களைப் பெருஞ்செல்வர்கள் கண்டு
மிகவுந் தொழில் புரிவித்து வருத்துவதுபோல், கொடிய படர் பொருப்பு
என இடைக்கு இடர் வினை தன கும்ப அழகும் - ஒரு கொடிமேல்
தங்குகின்ற இரண்டு மலைகள் போன்று இடைக்குத் துன்பம் விளைக்கின்ற
தனக் குடத்தின் அழகும், தடித்தின் அடி நிற்கும் இரதத்தை நிகர் பொன்
கடி தடத்தின் அழகும் - ஒரு மின்னலின் அடியிலே நிற்கிற
தேரைப்போன்ற அழகிய அல்குலின் அழகும், பொடித்து எழு வெயர்த்
திருமுகத் தழகும் - பொடிப்பொடியாக எழுகின்ற வியர்வைத் துளிகள்
பொருந்திய திருமுகத்தின் அழகும், முற்று ஒளி பொழந்து ஒழுக - நிறைவு
பெற்று ஒளி ததும்பி வடியவும்;
இச்செய்யுள் குளகம். தனங்கள் இடையை வருத்துதல் செல்வர்
வறியவரைத் தொழில் செய்வித்து வருத்துவதுபோல என உவமை கூறலின்
உவமையணி. கொடிமேல் தங்குகின்ற பொருப்பு, மின்னலின் அடியில்
நிற்கின்ற தேர்; இல்பொருள் உவமைகள். தன கும்பம் : உருவகம்.
முலையாகிய குடம் என்க.
(114)
| |
முத்தலைச்
சூல வெப்பச் சிறப்பு |
| 219. |
வேலைகள்
எழுந்துலகம் ஏழினுட னேழையும்
விழுங்கி விடுமஅக்
காலமுடி லிற்கொடிய ஊழிநெடு வெங்கனல்
கனன்றெரி தல்போல் |
|