|
|
சாலவினை
கொண்டுபொரு தாகுகனை வென்றவுணர்
தங்கள் குடரை
மாலைஇடு கின்றதிரி சூலமிசை வெங்கனல்
வளைந் தெரியவே. |
(இ
- ள்.) வேலைகள் எழுந்து உலகம் ஏழின் உடன் ஏழையும்
விழுங்கி விடும் அக் கால முடிவில் - கடல்கள் பொங்கி எழுந்து
பதினான்கு உலகங்களையும் அழித்துவிடும் ஊழிக்கால முடிவில், கொடிய
ஊழி வெங் கனல் - கொடுமையையுடைய ஊழிப் பெருந்தீ, கனன்று எரிதல்
போல் - கொதித்துப் பொங்கி எரிதல் போல், சால வினை கொண்டு
பொரு தாரகனை வென்று - பெரும் போர் புரிந்து தாரகா சுரணை
வென்று, அவுணர்தம் குடரை மாலையிடுகின்ற - அசுரர்களுடைய குடலை
மாலையாக அணிந்துகொள்கின்ற, திரிசூல மிசை - முவிலைச்
சூலத்தின்மேல், வெங் கனல் வளைந்து எரிய - வெப்பம் மிகுந்த
நெருப்பானது சூழ்ந்து எரிய;
ஏகாரம் :
ஈற்றசை. இச்செய்யுளும் குளகம். கீழ் ஏழு மேல் ஏழு
உலகங்கள்; தாருகனை வென்று எனவே தாருகாசுரனையுஞ் சூலத்தாற்
குத்திக் கொன்றது சூலம் என்பதும், அன்றியும் அசுரரையும் கொன்று
வென்று குடரை மாலையாகச் சூடியது என்பதும் விளங்கின. திரிசூலம் -
முத்தலை வேல் என்ற பெயரையுணர்த்தும், மூன்று நுனிகளையுடையது
சூலம்.
(115)
| |
வடி
வாள் ஒளியும் கிடுகின் ஒலியும் |
| 220. |
பொடிப்பொடி
திசைத்திசை தெறித்திடு சுடர்த்திரி
புரத் தழல்எனத்
தடித்தெழு வலத்தது தடக்கைவடி வாள்ஒளி
தயங்கி எழவே
அடிக்கடி எதிர்த்தலை அடித்தெழும் உகக்கடல்
அதிர்ச்சி எனவே
இடிக்குரன் முழக்கென இடக்கையின் மணிக்கட
கிரைத் தசையவே. |
(இ - ள்.)
பொடிப் பொடி திசைத் திசை தெறித்திடு சுடர் -
எல்லாத் திக்குகளிலும் பொடிப்பொடியாகத் தெறிக்கின்ற வாள் ஒளிச்
சுடரானது, திரிபுரத் தழல் என - முப்புரமெரித்த தீப்போல, தடித்து எழு
வலத்தது தடக்கை வடி வாள் ஒளி தயங்கி எழ - மின் போன்று எழுகின்ற
பெரிய வலது கையில் ஏந்திய கூர்மையாகிய வாளானது ஒளி விளங்கி
ஓங்கவும், அடிக்கடி எதிர்த்து அலை அடித்து எழும் உகக் கடல் அதிர்ச்சி
என - இடைவிடாமல் கரையோடு எதிர்த்து மோதி அலைவீசுகின்ற ஊழிக்
கடலின் பேரொலி போலவும், இடிக் குரல் முழக்கு என - இடிமுழக்கம்
போலவும், இடக்கையின் மணிக் கடகு இரைத்து அசைய - இடது
கையிலுள்ள மணிகள் பதிக்கப்பெற்ற கேடகம் ஒலிமுழக்கி அசையவும்;
|