பக்கம் எண் :


114

எழுவே, அசையவே : ஏகாரங்கள் அசை; எனவே : ஏகாரம் தேற்றம்.
பொடிப்பொடி, திசைத்திசை : அடுக்குத் தொடர்கள்; தடக்கை :
உரிச்சொற்றொடர்; வடி வாள் : பண்புத்தொகை.
                                                    (116)

     திருக்கரம் பற்றிய விறந்படைச் சேயொளி
221. பட்டயம் எடுத்தொருகை பத்திரம் எடுத்தொருகை
   பற்று மழுவும்
சொட்டையும் எடுத்திருகை சக்கரம் எடுத்தொருகை
   சுற்று மயிலும்
வட்டமும் எடுத்தொருகை வச்சிரம் எடுத்தொருகை
   மற்கர தலம்
எட்டினும் விதிர்ப்பன சுழற்றுவன வெந்தழ
   லெழுந் தெரியவே.

     (இ - ள்.) ஒரு கை பட்டயம் எடுத்து - ஒரு கையில் பட்டயத்தை
எடுத்தும், ஒரு கை பத்திரம் எடுத்து - ஒரு கையில் கோலினை எடுத்தும்,
பற்று மழுவும் சொட்டையும் எடுத்து - இரண்டு கைகளிற் பற்றப்படுகின்ற
மழுவும் வளை தடியும் எடுத்துக்கொண்டும், ஒரு கை சக்கரம் எடுத்துச்
சுற்றும் - ஒரு கை சக்கரத்தை எடுத்துச் சுழற்றும். இரு கை அயிலும்
வட்டமும் எடுத்து இரண்டு கைகள் வேலும் கேடயமும் எடுத்து, ஒரு கை
வச்சிரம் எடுத்து - ஒரு கையில் வச்சிரத்தை எடுத்தும், மல் கரதலம்
எட்டினும் - இவ்விதமாக வலிமை பொருந்திய எட்டுக் கைகளிலும், வெந்
தழல எழுந்து எரியவே விதிர்ப்பன சுழற்றுவன - வெப்பம் பொருந்திய
தீப்பொங்கி எரியும்படி வீசுகின்றனவும் சுற்றுகின்றனவும் ஆக.

     இச்செய்யுள் குளகம்; விதிர்ப்பன, சுழற்றுவன : முற்றெச்சங்கள்.
ஏகாரம் : ஈற்றசை.
                                                    (117)

     மணி யணிகலன்களின் வளரொளி
222. ஆடக மணிக்குழைகள் பாரியசரப் பணிக
   ளத்த கடகம்
சூடகம் இரட்டையுடு தாரமொடு பட்டமணி
   தோள்வளை செழும்
பாடகம் எழிற்பரி புரங்கழல் சதங்கைகள்
   பதக்க முடனே
நீடெழின் மதாணிகள் அலைந்துதிசை எங்கும்ஒளி
   நின்றட ரவே.

     (இ - ள்.) ஆடக மணிக் குழைகள் - மணிகள் பதிக்கப்பெற்ற
பொற்குழைகளும், பாரிய சரப்பணிகள் - பெரிய சரப்பணிகளும் அத்த
கடகம் சூடகம் - கை வளையல்களும் கங்கணங்களும், இரட்டை உடு
தாரகம் ஒடு பட்டம் - இரட்டையாகச் சுற்றப்பட்ட அறை நூல்