|
மாலைகளுடனே நெற்றிப்பட்டமும்,
அணி தோள் வளை - அழகிய வாகு
வலயங்களும், செழும் பாடகம் - செழுமையான பாடகங்களும் எழில்
பரிபுரம் கழல் சதங்கைகள் உடன் - அழகிய சிலம்புகள் கழல்கள்
சதங்கைகளுடனே, நீடு எழில் பதக்கம் மதாணிகள் அலைந்து திசை
எங்கும் ஒளிநின்று அடர - அழகு மிகுந்த பதக்கத்தாலாகிய மார்பு
அணிகள் நாலாபக்கங்களிலும் அசைந்து நிலைபெற்ற ஒளி பரப்ப;
எங்கும்
: உம்மை முற்றும்மை: பாரிய : பருமை என்னும்
பண்படியாகப் பிறந்த பெயரெச்சம். பரிபுரம் - சிலம்பு என்னும் காலணி.
ஏகாரம் : ஈற்றசை. இச்செய்யுள் குளகம்.
(118)
| |
கலை
மேகலையின் காட்சி |
| 223. |
நித்தில
நிரைத்துவயி ரத்தின மழுத்திமுழு
நீல நிறுவிப்
பத்திபட ஒப்பரிய பச்சைவிர விப்பதும
ராக மளவிச்
சித்திர மியற்றிய மணிக்கலையும் அப்பரிசு
செய்த கிரணத்
துத்தரிய மும்தொடையு முற்றுநில வும்வெயிலும்
ஒக்க விழவே. |
(இ - ள்.)
நித்திலம் நிரைத்து வயிரத்து இனம் அழுத்தி முழு நிலம்
நிறுவிப் பத்தி பட ஒப்பு அரிய பச்சை விரவிப் பதுமராகம் அளவி -
முத்துகளை வரிசையாகப் பகித்து வயிர இன மணிகளைப் பதித்துக்
கலப்பில்லாத நன்னீலமணிகளை நிலையாகப் பதித்துப் பத்தி பத்தியாக
இணையற்ற பச்சை மணிகளைக் கலந்து பதுமராகங்களைச் சேர்த்து,
சித்திரம் இயற்றிய மணிக் கலையும் - சித்திரப் பேட்டுகள் அமைத்த
அழகிய ஆடைகளும், அப்பரிசு செய்த கிரணத்து உத்தரியமும் -
அத்தன்மையாகவே அமைக்கப்பெற்ற ஒளிபொருந்திய மேல் ஆடையும்,
தொடையும் - மாலைகளும், நிலவும் வெயிலும் ஒக்க விழ - நிலவு ஒளியும்
சூரியன் ஒளியும்போல விழவும்;
வெண்ணிலா ஒளி வெண்ணிற ஆடைகளுக்கும் சூரியன்
ஒளி
அவைகளில் அமைத்த மணியொளிக்கும் முறையே உவமையாயினமையின்
உவமை அணி. இச்செய்யுள் குளகம். ஏகாரம் :
ஈற்றசை.
(119)
| |
பூதகணங்கள்
புரியுஞ் செயல்கள் |
| 224. |
காவல்முறை
நிற்பஒரு கோடியுள கற்பனைகள்
கற்று வழுவா
தேவலிடை நிற்பஒரு கோடியுள் கூடியவி
டாகினி கண்மேல் |
|