|
|
ஆவலொடு
நிற்பஒரு கோடியுள நன்னெறி
யமைச்ச ரெனவே
போவனவும் மீள்வனவு மாவஒரு கோடியுள
பூத கணமே. |
(இ
- ள்.) பூதகணம் - பூதக்கூட்டங்களில், காவல் முறை நிற்ப ஒரு
கோடி உள - காவற்கடமை பூண்டு வரிசையாக நின்று காவல்
புரிகின்றவை ஒரு கோடி இருக்கின்றன : கற்பனைகள் கற்று வழுவாது
ஏவலிடை நிற்ப ஒரு கோடி உள. குறிப்புணர்ந்து பிறழாது
ஏவல்புரிகின்றவை ஒரு கோடி இருக்கின்றன, கூடிய இடாகினிகள் மேல்
ஆவலொடு நிற்ப ஒரு கோடி உள - தங்களோடு சேர்ந்த பெண்
பூதங்கள்மேல் விருப்பத்தோடு நிற்கின்றவை ஒரு கோடி இருக்கின்றன,
நல்நெறி
அமைச்சர் எனவே போவனவும் மீள்வனவும் ஆவ ஒரு
கோடி உள - நல்ல நீதிகளையுணர்ந்த மந்திரிகள்போல காளியினருகே
போய்ப் போய்த் திரும்புகின்றவை ஒரு கோடி இருக்கின்றன. அரசர்
பக்கம் அணுகி அணுகி அரசரோடு அணுகியே இராது அகல்கின்ற
அமைச்சர்போல் பூதங்கள் காளியினருகே அணுகி அணுகி மீண்டன;
தொழிலுவமை அணி. ஏகாரம் : ஈற்றசை. இச்
செய்யுளும் குளகம். நிற்ப :
அன்பெறா அகரவீற்றுப் பலவறி சொல். நிற்பன என்பது பொருள்.
(120)
| |
பசரச
கணங்கள்புரி வீரச் செயல்கள் |
| 225. |
அச்சம
தறத்தம துயிர்கொடை யளித்தவ
ரறுத்த தலையை
வச்சிர மணிக்கடக நற்கர தலத்தினிடை
வைப்ப சிலவே
இச்சையின் நரப்பலிகள் இட்டதலை யைக்கடி
தெடுத்தி றைவிமுன்
பச்சுதிரம் முற்றொழுக வைப்பசத கோடிகள்
பசாச கணமே. |
(இ - ள்.)
சில - சில பசாசுகள், அச்சம் அது அறத் தமது உயிர்க்
கொடை அளித்து அவர் அறுத்த தலையை - பயமில்லாமல் தம்முடைய
உயிரைக் கொடையாகக் கொடுத்துத் தாமே அறுத்து வைத்த தலைகளை,
வச்சிரமணிக் கடக நற்கரதலத்தினிடை வைப்ப - வயிரமணிகள் பதித்த
கடகங்கள் அணிந்த காளியின் கைகளில் கொண்டுவந்து வைக்கும்,
சதகோடி பசாச கணங்கள் - நூறுகோடி பிசாசுக் கூட்டங்கள், இச்சையில்
நரர் பலிகள் இட்ட தலையை- விருப்பத்தோடு நரபலி கொடுத்த
தலைகளை, கடிது எடுத்து - விரைந்து எடுத்துக்கொண்டு வந்து, இறைவி
முன்பச்சுதிரம் முற்று ஒழுக வைப்ப - காளியின் முன்னே புதிதாக
ஒழுகுகின்ற இரத்தம் முழுதும் வடியும்படி வைக்கும்.
|