|
அச்சம் அது - அது
: பகுதிப்பொருள் விகுதி; ஏகாரம் : முன்னையது
பிரிநிலை; பின்னையது அசை. சதகோடிகள் பசாசகணம் என் பதனைச்
சதகோடி பசாச கணங்கள் என மாறுக.
"அடிக்கழுத்தின் நெடுந்தலையை அரிவ ராலோ
அரிந்ததலை அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்ததலை கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ"
என்ற கலிங்கத்துப்பரணி
அடிகள் ஈண்டுக் கவனிக்கத்தக்கன.
(121)
| |
அரம்பையர்
புரியும் பெரும் பணிகள் |
| 226. |
ஈடுபடு
நுண்ணிடை நுடங்கமிகு சாமரம்
இரண்டு புறமும்
போடும்அவ ரும்பரி புரத்திரு மலர்த்துணை
பொருத்தி முடிமேல்
சூடும்அவ ரும்கவி தொடுக்கும்அவ ரும்பவுரி
சுற்றி முறைநின்
றாடும்அவ ரும்இசை களபாடும் அவரும்பல
அரம்பை யர்களே. |
(இ - ள்.)
ஈடுபடு நுண்ணிடை நுடங்க மிகு சாமரம் இரண்டு
புறமும் போடும் அவரும் - குனிந்து நிமிர்வதில் ஈடுபடுகின்ற சிற்றிடை
துவளும்படி மிகுந்த சாமரங்களை இருபக்கங்களிலும் போடுகின்றவர்களும்,
பரிபுரத்து இரு மலர்த் துணை பொருத்தி முடிமேல் சூடும் அவரும் -
சிலம்பணிந்த இரண்டு தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தலைமேல்
பொருந்தவைத்துச் சூடுபவர்களும், கலிதொடுக்கும் அவரும் -
வணக்கப்பாக்கள் பாடுகின்றவர்களும், பவுரி சுற்றி முறை நின்று ஆடும்
அவரும் - கூத்தின் வகைகள் தோன்றச் சூழ்ந்து முறையாக நின்று
கூத்தாடுகின்றவர்களும், இசைகள் பாடும் அவரும் - இன்னிசைக் கருவிகள்
வாசிப்பவர்களும், பல அரம்பையர்களே - பல தேவருலகப் பெண்களே.
மானுடப்பெண்களைப் பிரித்தமையின் ஏகாரம் பிரிநிலை;
ஏகாரம்
தேற்றமாகவும் கொள்ளலாம். ஈற்றசையாகவும் எடுக்கலாம். நுண்மை +
இடை - நுண்ணிடை. மலர் : உவமையாகுபெயர். மலர் போன்ற
பாதங்களை யுணர்த்தியது. இருபுறமும் : முற்றும்மை. அவரும்
என்பதிலுள்ள உம்மை எண்ணும்மை.
(122)
| |
இடாகினிகள்
புரியும் பணிகள் |
| 227. |
மஞ்சனம்
எடுப்பவரும் மாமலர் தொடுப்பவரும்
வாள்வி ழிகளுக
கஞ்சனம் அளிப்பவரும் ஆர்அமு தளிப்பவரும்
அன்னை திருமுன் |
|