பக்கம் எண் :


118

கஞ்சனை பிடிப்பவரும் வஞ்சனை யறப்பரி
   கலத்து டனெடுத
தின்சொல்வழி நிற்பவரும் எண்ணரிய கோடிக
   ளிடாகி னிகளே.

     (இ - ள்.) மஞ்சனம் எடுப்பவரும் - காளிக்குத் திருமஞ்சனம்
எடுப்பவர்களும். மா மலர் தொடுப்பவரும் - சிறந்த பூக்களை மாலையாகத்
தொடுக்கிறவர்களும், வாள் விழிக்கு அஞ்சனம் அளிப்பவரும் - ஒளி
பொருந்திய கண்களுக்கு மை கொடுப்பவர்களும், ஆர் அமுது
அளிப்பவரும் - அருந்துதற்கு அருமையான திருவழுது படைப்பவர்களும்,
அன்னை திருமுன் - தாயாகிய காளிதேவியின் திருமுன்பே, கஞ்சனை
பிடிப்பவரும் - கண்ணாடைி காட்டுகிறவர்களும், வஞ்சனை அறப்
பரிகலத்துடன் எடுத்து கள்ள மற்ற உள்ளத்தன்புடன் பரிகலத்தில் மற்றும்
வேண்டியன எடுத்துக்கொண்டு, இன் சொல் வழி நிற்பரும் தேவியின் இன்
சொல்லின்படி நிற்கிறவர்களும், எண்ணரிய கோடிகள் இடாகினிகள் -
எண்ணிறந்த கோடிக்கணக்கான இடாகினிப் பேய்களாகும்.

     ஏகாரம் : ஈற்றசை. உம்மை : எண்ணும்மை. மா மலர் :
உரிச்சொற்றொடர். மஞ்சனம் - நீராடுதற்குரிய நீர். அஞ்சனம் - மை.
பரிகலம் - உணவு தாங்கும் பாத்திரம்.
                                                   (123)

 
      அரியாசனத்தில் அமர்ந்திருத்தல்
228. பண்ணவர் திரண்டுபகர் முன்றில்தனில் வந்தடி
   பணிந்து தொழவே
மண்ணவர் விழுந்துதம தெண்ணமுடி யும்படி
   வரங்கள் பெறவே
கண்ணருள் சுரந்துதறு கண்ணரி சுமந்தகன
   கத்த விசின்மேற
பெண்ணர சிருந்தனள் பிறங்குசடி லம்புடை
   பெயர்ந்த லையவே.

     (இ - ள்.) பண்ணவர் திரண்டு - தேவர்கள் கூடி, பகர் முன்றில்
தனில் வந்து - புகழப்படுகின்ற திருமுற்றத்தில் வந்து, அடிபணிந்து தொழ
- திருவடி பணிந்து வணங்கவும், மண்ணவர் விழுந்து தமது எண்ணம்
முடியும்படி வரங்கள் பெற - உலகமக்கள் நிலமிசை விழுந்து தங்கள்
கருத்து நிறைவேறும்படி வரங்கள் பெறவும், கண் அருள் சரந்து -
திருக்கண்களில் கருணைபொழிந்து, பிறங்கு சடிலம் புடை பெயர்ந்து
அலைய - விளங்குகின்ற சடைகள் பக்கங்களில் அசைந்தாட, தறுகண்
அரி சுமந்த கனகத் தவிசின்மேல் பெண் அரசி இருந்தனள் -
அஞ்சாமையுடைய சிம்மங்கள் தாங்கிய பொன்னாசனத்தில் பெண்
தெய்வமாக காளிதேவி வீற்றிருந்தாள்.

     ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. முன்றில் : இலக்கணப்போலி. (113)
முதல் குளகமாக வந்து 'பெண்ணர சிருந்தனள்' என முடிவு பெற்றது.
பொங்கிவிழ (113), பொழிந்தொழுக (114), வளைந்தெரிய (115),
கடகிரைத்தசைய (116), எழுத்தெரிய (117), ஒளிநின்றடர (118), ஒக்க விழ
(119) என்ற செயவெனெச்சங்கள் அடுக்கி இருந்தனள் என்ற
வினைமுற்றைக்கொண்டன. 120, 121, 122, 123, 124 எண்ணுள்ள கவிகளும்
பூதகணம், பாராகணம், அரம்பையர்கள், இடாகினிகள் இவ்வாறு நிற்பர்
எனக் கூறிப் பின் பண்ணவரும் மண்ணவரும் பணியப்
பெண்ணரசிருந்தனன் எனவும் கூட்டி வினைமுடிவு செய்க.
                                                   (124)