பக்கம் எண் :


119

        காவலன் வந்து காளியைப் பணிதல்
229. அம்பொனின் மணித்தவிசின் அம்பிகை இருப்பஅர
   சர்க்க ரசனும்
கம்பகர டக்களிறு வெம்பரி பதாதிகள்
   கடைத்தலை நிறீஇக்
கும்பமுனி தம்பியொ டருந்தவர் குலத்தரசர்
   கூடி வரவே
வம்புகுடி கொண்டமுலை மங்கைதிரு முன்றிலிடை
   வந்து தொழுதான்.

     (இ - ள்.) அம்பொன் இன் மணித் தவிசின் அம்பிகை இருப்ப -
அழகிய பொன்னாற்செய்த மணிகள் பதித்த ஆசனத்தில் காளியம்மன்
எழுந்தருளியிருப்ப, அரசர்க்கு அரசனும் - வேந்தர் வேந்தனாகிய
அரிச்சந்திரனும், கம்ப கரடக் களிறு வெம் பரி பதாதிகள் கடைத் தலை
நிறீஇ - அசைகின்ற மதச்சுவடு பொருந்திய ஆண் யானைப் படையும்
கடுவேகமுடைய குதிரைப்படையும் காலாட்படையும் தலை வாயிலில்
நிறுத்தி, கும்பமுனி தம்பியொடு அருந்தவர் குலத்து அரசர் கூடி வரவே -
அகத்தியர் தம்பியான வசிட்டர் முதலிய பெருந்தவ முனிவர் குழாத்துடன்
அரசர்களும் சேர்ந்துவர, வம்பு குடி கொண்ட முலை மங்கை திரு
முன்றிலிடை வந்து தொழுதான் - கச்சு நிலைபெற்றிருக்கின்ற
தனங்களையுடைய காளிதேவியின் திருமுற்றத்திலே வந்து வணங்கினான்.

     நிறீஇ : சொல்லிசையளபெடை; வம்பு : வாசனையும் ஆம். உம்மை
சிறப்பும்மை. கும்பமுனி - குடத்தில் தோன்றிய அகத்தியமுனிவர். அவர்
முனிவர்கட்குத் தலைவர் அடுத்தபடியாகத் தலைமை பெற்றவர்
வசிட்டராதலின் அவர் கும்பமுனிவர் தம்பியானார். கடம் - மதம் பாய்
சுவடு.
                                                   (125)

 
     காவலன் காணக் கற்றேர் பொற்றேராதல்

     
    
 அறுசீர் விருத்தம்
230. நற்றேரை விட்டிறங்கி றாயகியைத் தொழுதிறைஞ்சி
   நண்ணி ராசன்
முற்றேரை நோக்குதலும் முடிவேந்தன் கருணைவிழி
   முனைக டாக்கக்