பக்கம் எண் :


12

நாட்டுச் சிறப்பு
 

            கலிநிலைத் துறை
15. முன்ஆ றறியாப் பிறவிக்குருடான மூடன்
தன்னால் தொடுசா கரத்தினிடம் சாற்று மாபோல்
என்னால் அறிதக்க தன்றென்னினும் மன்னர் மன்னன்
நன்னாட் டணியான் சிலவல்ல நடத்தல் உற்றேன்.

     (இ - ள்.) முன் ஆறு அறியா பிறவிக்குருடான மூடன் தன்னால்
தொடு சாகரத்தின் இடஞ் சாற்றுமாபோல் - முன் ஒரு காலத்தும் வழி
தெரியாத பிறவிக்குருடான அறிவில்லாதவனால் தோண்டப்பட்ட கடலின்
இடப்பரப்பு முழுவதும் சொல்லப்படும் விதம்போல், என்னால் அறிதக்கது
அன்று என்னினும் - என்னால் எவ்வாற்றானும் அறிய முடியாததாயினும்,
மன்னர் மன்னன் நன்னாட்டு அணி - வேந்தர் வேந்தனாகிய
அரிச்சந்திரனது நல்ல நாட்டின் அழகுகளில், யான் சில வல்ல நடத்தல்
உற்றேன் - நான் என்னாற் சொல்ல வல்லவை சில சொல்லத்
தொடங்குகின்றேன்.

     உற்றேன், உறு : பகுதி, ஒற்று இரட்டித்து இறந்தகாலங்காட்டியது.
அறியா : ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். உவமையணி. மூடன்
தன்னால் - இதில் தன் : சாரியை; ஆல் : மூன்றனுருபு. தொடு சாகரம்
தோண்டப்பட்ட கடல். சாற்றுமா - சாற்றப்படுமாறு. ஆறு - 'று' கெட்டது.
சாற்றும். இதிற் படுவிகுதி தொக்கதாகக்கொள்க.
                                                    (1)

           வான் சிறப்பு
16. தட்பாற் கடலா ரமுதம் செழுமித் தழைத்து
நட்பாற் புகுந்தால் எனவந்துவர் வேலை நண்ணி
உட்பாற் புனல்உண் டெழுந்தோங்கிய காளகூடம்
விட்பாற் பரந்தால் எனமேகம் எழுந்த தன்றே.

     (இ - ள்.) மேகம் தண் பால் கடல் ஆர் அமுதம் கெழுமித்
தழைத்து நட்பால் புகுந்தால் என வந்து உவர் வேலை நண்ணி -
மேகமானது குளிர்ந்த பாற்கடலில் நிறைந்த அமுதம் திரண்டு மேலெழும்பி
வருவதுபோல் தூயவெண்ணிறத்தோடு வந்து நட்புரிமையால் உள்ளே
செல்வதுபோல் உப்புநீர்க் கடலின் உட்புகுந்து, உள் பால் புனல் உண்டு -
கடலுள் நீரைக்