பக்கம் எண் :


13

குடித்து, எழுந்து ஓங்கிய காளகூடம் விண் பால் பரந்தால் என
எழுந்தது - பாற்கடலைக் கடைந்தபோது தோன்றி உயர்ந்து ஓங்கிய
ஆலகாலவிடம் ஆகாயமெங்கும் பரவியதுபோல எழுந்தது.

     வெண்ணிற மேகத்திற்குப் பாற்கடல் அமுதம் உவமையாகவும் கருநிற
மேகத்திற்கு அதிற்றோன்றிய விடம் உவமையாகவும் கொள்க. தண்மை +
பால் = தட்பால், "ஈறுபோதல்" "ணன வல்லினம் வரட்டறவும்"
உள் + பால் = உட்பால். "லள வேற்றுமையிற் றடவும்." அன்று, ஏ :
அசைகள். பாற்கடலிற்றோன்றிய அமுதம் கருங்கடலுக்குள் தானே வந்து
புகுவதற்கு உரிமை தோன்ற, 'நட்பாற் புகுந்தால் என' என்றார்.
கருங்கடலுக்கும் பாற்கடலுக்கும் தொடர்பிருப்பதனால் அது தானே
கருங்கடலுக்குள் நுழைந்தது என்று கூறினார்.
                                                     (2)

17. அடியும் முடியும் தெரியாதிருண் டண்டம் எங்கும் கொடியும் குடையும் எனமாமுகிற் கூட்டம் ஈண்டிப் படியும் விசும்பும் பகைத்தால்எனப் பார விற்கோத் திடியும் துளியும் கணையாய்ப்பெரி தெய்த தன்றே.

     (இ - ள்.) மா முகில் கூட்டம் - பெரிய மேகக் கூட்டம், அடியும்
முடியும் தெரியாது அண்டம் எங்கும் இருண்டு - கீழும் மேலும்
தெரிந்துகொள்ள முடியாதபடி உலகம் எல்லாம் இருண்டு, கொடியும்
குடையும் என ஈண்டி - வானத்தில் கொடியுருவம் போலவும் குடை
உருவம் போலவும் தோன்றும்படி ஒன்றுகூடி, படியும் விசும்பும் பகைத்தால்
என - மண்ணும் விண்ணும் பகைத்துப் போர்புரிந்தது போல, பார வில்
கோத்து - பளுவான இந்திரவில் பூட்டி, இடியும் துளியும் கணையாய்ப்
பெரிது எய்தது - இடியோசையாகிய போர் முழக்கத்தோடு
மழைத்துளிகளாகிய அம்புகளை எய்தது.

     முகிற்கூட்டம் : எழுவாய்; எய்தது : பயனிலை. மேகக்கூட்டத்தைக்
கொடி குடையகளாகவும், மண்ணையும் விண்ணையும் எதிர்த்து நின்று
போர் புரியும் பகைவராகவும், இந்திர வில்லை வில்லாகவும் மழைத்
துளிகளை அம்புகளாகவும், உருவகப்படுத்தி இடியைப்போர் முழக்கமாக
உருவகப்படுத்தாமையின் ஏகதேச உருவக அணி. அடியும் முடியும், படியும்
விசும்பும் : முரண்தொடைகள். அன்று, ஏ : அசை; மாமுகில் :
உரிச்சொற்றொடர்.
                                                     (3)
      மழைத்துளி விழுஞ் சிறப்பு
18. மீனம் திகழ்வே லையிற்றோன்றிய தென்ன விண்ணோர்
தானம் திகழ்தாத் திரியைப்பெருந் தாழிஆக்கி
வானம் தனைசெய் அரிவட்டகை ஆக்கி விட்ட
பானம் தனைஒத்து விழுந்தது மாரி பம்பல்.