|
'அம்பும்'
என்பது உபலக்கணத்தால் பெறப்பட்டது. 'பொன் ஆரும்
களப முலை' என்பதற்குப் பொன்போன்ற தேமற்படர்ந்த சந்தனம் பூசிய
கொங்கை எனவும் பொருள் கூறலாம். அரிச்சந்திரன் மனத்தில்
நினைத்தவளவில் வெளிப்பட்டாள் என விரைவு கூறினர்.
(127)
| |
கற்றேர்
பொற்றேராய காரணம் வினவல் |
| 232. |
மாதங்கி
வந்திடலும் மலர்க்கரங்கள் முடிமீது
வைத்துச் செம்பொற்
பாதங்கள் மிசைவீழ்ந்து பணிந்தெனது தவப்பயன்றான்
பலித்த தென்னாப்
பூதங்கள் வினையாடும் திருவாயிற் கற்றேர்போய்ப்
பொற்றே ரான
தீதென்று நீஅருள்வாய் எனக்கேட்கக் குமரிஎடுத்
தியம்பல் உற்றான். |
(இ - ள்.)
மாதங்கி வந்திடலும் - காளிதேவி தோன்றியவுடனே,
மலர்க்கரங்கள் முடிமீது வைத்து, தாமரை மலர்போன்ற கைகளைத்
தலையில் வைத்து, செம்பொன் பாதங்கள் மிசை விழுந்து - காளிதேவியின்
சிவந்த திருவடிகளில் விழுந்து வணங்கி, எனது தவப்பயன்தான் பலித்தது
என்னா - நான் செய்த தவத்தின் பயன் இன்றே கிட்டியது என்று
நினைத்து, பூதங்கள் விளையாடும் திருவாயில் கல் தேர் போய்ப் பொன்
தேர் ஆனது - பூதங்கள் விளையாடுகின்ற திருவாயிலிலுள்ள
கல்லாலாக்கப்பட்ட தேர் முழுதும் மாறிப் பொற்றேர் ஆனதற்குக் காரணம்
ஈது என்று, நீ அருள்வாய் எனக் கேட்க - இதுதான் என்று நீ திருவருள்
புரிந்து கூறவேண்டும் என்று கேட்க, குமரி எடுத்து இயம்பல் உற்றாள் -
கன்னியாகிய காளிதேவி விளக்கிச் சொல்லத் தொடங்கினாள்.
மலர்க்கரங்கள் : உவமைத்தொகை; என்னா : செய்யா
என்னும்
வாய்பாட்டு வினையெச்சம்; உற்றாள் - உறு : பகுதி. ஒற்று இறந்த காலங்
காட்டியது. செம்பொன் : பண்புத்தொகை. நல்ல பொன் - உயர்ந்த பொன்.
பொற்பாதங்கள் : உவமைத்தொகை.
(128)
| |
காளி
காரணங் கூறுதல் |
| 233. |
உவராழி
மண்ணாசை ஒழித்தகலும் அடல்வருணன்
உலகில் யாரும்
கவராது பொற்றேரைக் கற்றேரா கச்சபித்துக்
கண்முன் காட்டி
எவரானும் இதுநோக்கின் இவ்வுருப்போய்ப் பண்டையுரு
எய்தும் ஆகில்
அவராகும் இதற்குதியோ ரவர்தமக்கே கொடுப்பதென
அளித்துப் போனான். |
|