பக்கம் எண் :


122

     (இ - ள்.) உவர் ஆழி மண்ணாசை ஒழித்து அகலும் அடல்
வருணன் - உப்புக்கடல் சூழ்ந்த உலக ஆசையைவிட்டு அகன்ற ஞான
உரம் பெற்ற வருணன், உலகில் யாரும் கவராது பொன் தேரைக் கல்
தேராகச் சபித்துக் கண் முன் காட்டி - இவ்வுலகில் எவரும் கவர்ந்து
கொள்ளாதவாறு பொன் தேரைக் கல் தேராம்படி சபித்து என் கண்
முன்னால் காட்டி, எவரானும் இது நோக்கின் இ உருப் போய்ப் பண்டை
உரு எய்தும் ஆகில் - யாவராயினும் இதனைப் பார்த்தவுடன் இது இக்
கல் உருவம் போய்ப் பழைய பொன் உருவம் அடையுமானால், அவர்
இதற்கு உரியோர் ஆகும். அவர் இதற்கு உரியவர் ஆவர், அவர் தமக்கே
கொடுப்பது என அளித்துப்போனான் - அவர்க்கே அதனைக் கொடுக்க
என்று என்னிடம் கொடுத்துச் சென்றான்.

     வருணன் மண்ணாசை பொன்னசை ஒழித்தவனாகலின் அவன்
வலிமை ஞானவலிமையாயிற்று. கொடுப்பது : வியங்கோள் வினைமுற்று.
'கொள்ளப்படாது மறப்பது அறிவில் என் கூற்றுக்களே' என்ற
திருக்கோவையடியில் 'மறப்பது' என்பது 'மறக்க' எனப் பொருள் தருதல்
காண்க.
                                                   (129)

 
  காளி அரிச்சந்திரனுக்கு அப்பொற்றேரை யளித்தல்
234. மன்னாகேள் என்னுடைய மணிவாயி றனில்வருணன்
   வைத்துப் போன
அந்நாடொ ட்டிந்நெடுநாள் அளவாகக் கல்லாய்நின்
   அருட்க ணோக்கப்
பொன்னான செழுந்தேர்நீ கொடுபோவென் றினிதளிக்கப்
   புகழ்ந் தயோத்தி
நன்னாடன் றான்வாங்கி நவமணித்தே ரதில்ஏறி
   நடத்தி னானே.

     (இ - ள்.) மன்னா கேள் - அரசனே கேட்பாயாக, என்னுடைய
மணி வாயில் தனில் வருணன் வைத்துப் போன - என்னுடைய அழகிய
திருவாயிலில் வருணன் வைத்துச்சென்ற, அ நாள் தொட்டு இ நெடு நாள்
அளவாக - அந்த நாளிலிருந்து நெடுங்காலமாக இந்நாள் வரையும்,
கல்லாய் - கல்லாயிருந்து நின் அருட்கண் நோக்கப் பொன்னான செழுந்
தேர் - உன் அருட்கண்களால் பார்க்கவே பழைய பொற்றேர் ஆகிய
இந்தப் பெருந் தேரை, நீ கொடு போ என்று இனிது அளிக்க - நீ
கொண்டு போ என்று மகிழ்ச்சியோடு கொடுக்க, அயோத்தி நல் நாடன்
- அயோத்திநகர் தலைநகராக அமைந்த நல்ல கோசலநாட்டையுடைய
அரிச்சந்திரன், தான் புகழ்ந்து ஏத்தி வாங்கி - தான் புகழ்ந்து துதித்து
வாங்கி, நவமணித் தேரில் ஏறி நடத்தினான் - ஒன்பான் மணி பதித்த
அந்தத் தேரில் ஏறிச் செலுத்தினான்.

     ஏகாரம் : ஈற்றசை; மன்னா : விளி; கொடு : கொண்டு என்பதன்
தொகுத்தல்; தேர் அது - அது : பகுதிப்பொருள் விகுதி. அதில் என்ற
சுட்டு நவமணித் தேர் என்பது அப் பொற்றேர்தான் என்பதை விளக்கியது.
அதனால் அப்பொற்றேரில் நவமணிகளும் பதித்திருந்தன வென்பது
விளங்கிற்று.
                                                   (130)