பக்கம் எண் :


124

     (இ - ள்.) கூன் கடுவன் தலை குரும்பை வீழ்தலின் - கூனான
ஆண் குரங்கின் தலையில் தென்னங்குரும்பை விழுதலினால், தீம் கனி
வருக்கையில் பொதித்த செம்முக வான் கவி - இனிய பலாப்பழங்களின்
மத்தியில் பலாமரத்தினுள்ளிருந்த சிவந்த முகத்தையுடைய பெரிய குரங்கும்,
மந்தி வால் பிடித்து இழுத்து கொடு - தன் கூட இருந்த பெண்குரங்கின்
வாலைப்பிடித்து இழுத்துகொண்டு, தான் முன் கதலிப் படப்பை சாரும் -
வாழைச்சோலைக்குள் தான் முன்னோக்கிச் செல்லும்.

     ஆல் : அசை. தென்னங்குரும்பை வீழ்தலினால் பயந்து பெண்
குரங்கின் வாலைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஆண்குரங்கு முன்னோக்கிச்
செல்லப் பெண்குரங்கு பின்புறமாகவே இழுக்கப்படும் என்பதாம். கொடு :
கொண்டு என்பதன் தொகுத்தல், "பலா மரத்திலிருந்து பழச்சுளையைத்
தின்னும்போது ஆண் குரங்கு தலையில் தென்னங்காய் விழுந்தது என்றும்,
விழவே பழத்தில் அதன் முகம் புதைந்தது எனவும், அருகில் நின்ற மந்தி
அதன் வாலைப் பிடித்திழுத்துப் பலாப்பழந் தின்றது போதும்;
இங்கிருந்தால் மண்டையுடைந்து உயிர் போய்விடும்;
வாழைத்தோட்டத்திற்குச் சென்றால் இடையூறின்றி உண்டு வாழலாம் என்ற
கருத்துடன் முன் தான் கூட்டிக்கொண்டு கதலியம் படப்பை சாரும்" என்ற
கருத்துப்பட இக் கவிக்குப் பொருள் கூறுவதே சிறந்தது.
                                                   (133)

 
238.

பலவளை மணிகளும் பதும ராகமும்
நிலவெழ வெயில்எழ நீலம் பங்கயம்
புலரியும் மாலையும் புகுதல் இல்என
மலர்தலும் குவிதலும் மறந்த வாவியே.

     (இ - ள்.) பல வளை மணிகளும் நிலவு எழ - பலவகையான
சங்ககுகளின் முத்துகளின் ஒளியால், நிலவு எழ - எப்பொழுதும் நிலாத்
தோன்றலால், புலரியும் புகுதல் இல் என - விடியற்காலம் வருதல்
இல்லையென்று, வாவி நீலம் மலர்தலும் குவிதலும் மறந்த - குளத்திலுள்ள
நீலோற்பல மலர்கள் விரிதலும் குவிதலும் இன்றி எப்போதும்
மலர்ந்திருந்தன,

     பதுமராகம் வெயில் எழ - பதுமராக மணி வெய்யில் எறித்தலால்,
பங்கயம் மாலையும் புகுதல் இல் என - தாமரைகள் மாலைக்காலம்
வருதலே இல்லை என்று, மலர்தலும் குவிதலும் மறந்த - விரிதலும்
குவிதலும் இன்றி எப்போதும் மலர்ந்திருந்தன. பதுமராகம் - நவமணிகளின்
ஒன்று. நிரனிறை யணி. நீலம் பகலிற் குவியும், முத்துகள் எப்பொழுதும்
நிலவொளி வீசுதலின் நீலம் ஒருபொழுதும் குவிதல் இல்லை தாமரை
இரவில் குவியும். பதுமராகம் எப்பொழுதும் பகல் வெய்யில் எறித்தலின்
தாமரை ஒரு பொழுதும் குவிதல் இல்லை. உம்மைகள் எண்ணும்மை.
தாமரை மலர்களும் நீலமலர்களும் இரவினும் பகலினும் மலர்தலும்
குவிதலுமின்றி ஒரு தன்மையவாய் இருந்தன என்பது.
                                                   (134)

 
239. தாள்களும் துடைகளும் தைய லார்மணித்
தோள்களும் முலைகளும் சோலை காட்வே