|
| 246. |
முன்னரோர்
முனிவரன் மொழிந்த சாபத்தால்
பன்னகத் தரிதுயில் பாற்க டற்கணே
பொன்நகர் வளனெலாம் புக்க தாமென
மன்னவன் கங்கையில் வந்திறங் கினான். |
(இ
- ள்.) முன்னர் ஓர் முனிவரன் மொழிந்த சாபத்தால் - முற்
காலத்தில் ஒரு துருவாச மாமுனிவர் இட்ட சாபத்தினால், பன்னகத்து அரி
துயில் பால் கடல் கண் - பாம்பணையில் திருமால் யோகத் துயில் புரிந்த
திருப்பாற்கடலில், பொன் நகர் வளன் எலாம் புக்கதாம் என -
தேவருலகத்திலுள்ள செல்வம் முழுதும் போய்ப் புகுந்தது போல,
மன்னவன் கங்கையில் வந்து இறங்கினான் - அரிச்சந்திரப் பேரரசன்
கங்கைக்கரையில் வந்து இறங்கினான்.
முன்னர்
- அர் : பகுதிப்பொருள் விகுதி; கணே, எலாம் :
தொகுத்தல் : வளன் - போலி. கங்கை : ஆகுபெயர். பொன்னுலகிலுள்ள
செல்வமெல்லாம் திருப்பாற்கடலிற் கவிழ்ந்ததுபோல அரிச்சந்திரன்
படையுடன் கங்கையுளிறங்கிய தோற்றமிருந்தது எனக் கொள்க. இந்திரன்
பெருஞ்செல்வமெல்லாம் இங்கு வந்ததுபோலத் தோன்றியது என்பது
கருத்து.
(142)
| |
கங்கைச்
சிறப்பு |
| 247. |
மின்னிற
நுண்ணிடை மின்ன னார்முலைச்
செந்நிறச் சுண்ணமும் திமிர்ந்த சாந்தமும்
நன்னிறக் குங்குமச் சுவடு நண்ணிவான்
வின்னிறம் ஒத்தது விமல நீத்தமே. |
(இ - ள்.)
விமல நீத்தம் - அழுக்கற்ற கங்கை நீரானது. மின் நிற
நுண் இடை மின் அனார் முலைச் செந்நிறச் சுண்ணமும் - மின்னலைப்
போன்ற நிறமும் நுட்பம் பொருந்திய இடையையுமுடைய மின் கொடி
போன்ற பெண்களின் கொங்கையிற் பூசப்பெற்ற சிவந்த நிறமுள்ள
வாசனைப் பொடியும், திமிர்ந்த சாந்தமும் - நிறைந்த சந்தனமும், நல் நிறக்
குங்குமச் சுவடும் நண்ணி - நல்ல நிறமுள்ள குங்குமச் சேறும் பொருந்தி,
வான வில் நிறம் ஒத்தது - வானவில்லின் நிறத்தை ஒத்திருந்தது.
உம்மைகள் எண்ணும்மை. ஏகாரம்
: ஈற்றசை. வானவில்லின் நிறம்
பலவகை நிறங்களும் கலந்த நிறம். அதுபோலக் கங்கை வெண்மை
நிறமாகிப் பலவகை நிறமாகக் காணப்பட்டது, சுண்ணம் சாந்தம் குங்குமம்
இவைகள் கலந்ததால்.
(143)
| |
கங்கை
நீராடல் |
| 248. |
வரைசெறி
வேழமும் மாவின் கூட்டமும்
விரைசெறி தார்ப்புய வேந்தர் மக்களும்
பிரசமா மலர்க்குழல் பேதை மாதரும்
அரசனும் கங்கைநீ ராடி ஏறினார். |
|