பக்கம் எண் :


129

     (இ - ள்.) வரை செறி வேழமும் மாவின் கூட்டமும் - மலை
களைப்போல் நிறைந்த யானைகளும் குதிரைக் கூட்டமும், விரை செறி
தார்ப்புய வேந்தர் மக்களும் - மணம் நிறைந்த மாலைகளையணிந்த
தோள்களையுடைய அரசகுமாரர்களும், பிரசமா மலர்க்குழல் பேதை
மாதரும் - தேன் ஒழுகப்பெற்ற சிறந்த பூக்களை அணிந்த
கூந்தலையுடைய பெண்களும், அரசனும் கங்கை நீராடி ஏறினிார் -
அரிச்சந்திரனும் கங்கையாற்றிலே முழுகிக் கரை ஏறினார்கள்.

     வரை செறி - வரைபோல நெருங்கிய என உவமையுருபு விரித்துக்
கொள்க. விரை செறி - மணம் நிறைந்த. பிரசம் மா மலர் - மணம்
நிறைந்த சிறந்த மலர் எனவும் பொருள் கொள்ளலாம்.
                                                   (144)

 
          கங்கையைக் கடத்தல்
249. அங்கைவேன் மன்னவன் அருளின் நோக்கினோ மங்கைதன் கற்பினோ அமைச்சர் மாண்பினோ வெங்கயற் கட்பெரு வெள்ளத் தோடும்போய்க் கங்கையைப் பெரும்படைக் கடல் கடந்ததே.

     (இ - ள்.) அங்கை வேல் மன்னவன் அருளின் நோக்கினோ -
அழகிய கையில் வேலேந்திய அரிச்சந்திர மன்னனது
அருட்பார்வையினாலோ, மங்கைதன் கற்பினோ - சந்திரமதியின்
கற்பினாலோ, அமைச்சர் மாண்பினோ - மந்திரிகளின் நற்குண
நற்செய்கைகளினாலோ, வெம்கயல் கண் பெரு வெள்ளத்தோடும் போய் -
விரும்பத்தகும் கயல் மீன் போன்ற கண்களையுடைய பெண்கள்
பெருக்கத்துடன் சென்று, பெரும் படைக் கடல் - அந்த
அரிச்சந்திரனுடைய பெரிய சேனைக் கடல், கங்கையைக் கடந்தது -
கங்கையாற்றைக் கடந்தது.

     ஏகாரம் : ஈற்றசை; ஓகாரம் : ஐயப்பொருளில் வந்தது. அருள்
நோக்கமாவது மன்னன் தன்னுயிர்போல் மன்னுயிரைப் புரத்தல் கற்பாவது
மனத்தை ஒருவழி நிறுத்துதல். அமைச்சர் மாண்பாவது அறிவும் ஆற்றலும்
சொல்வன்மையும் முதலாயின. வெங்கயற்கட் பெருவெள்ளம் என்பது
கயற்கண் என்ற குறிப்பால் மங்கையர் கூட்டத்தை யுணர்த்தியது. மங்கையர்
மெல்லிய தன்மையுடையர்; வெள்ளத்தைக் கண்டால் அஞ்சுவர்;
அவர்களைக் கூட்டி ஆற்று வெள்ளத்தில் நீந்திக் கரையேறுவது அரிது
என்பது தோன்றத் தனியே எடுத்துக் கூறினர். வெள்ளத்தோடும் போய்
என்றது அதனருமையை விளக்கியது.
                                                   (145)

 
        கன்னமாபுரிக் காட்சி
250. அன்னம்ஆ டும்துறை அகழும் வாவியும்
வன்னமா மதில்களும் மாட கூடமும்
பொன்னின்மா மேடையும் பொலிந்து தோன்றஅக்
கன்னமா புரிதனைக் கண்ணின் நோக்கினான்.

     (இ - ள்.) அன்னம் ஆடும் துறை அகழும் - அன்னப்பறவைகள்
விளையாடுகின்ற நீர்த்துறைகளையுடைய அகழிகளும், வாவியும் - குளங்