|
களும், வன்னம் மா
மதில்களும் - அழகிய பெரிய மதில்களும், மாட
கூடமும் - மாட கூடங்களும், பொன்னின் மா மேடையும் - பொன்
மயமான பெரிய மேடைகளும், பொலிந்து தோன்ற - விளங்கித் தோன்ற,
அக் கன்னமா புரிதனைக் கண்ணின் நோக்கினான் - அந்தக் கன்னமாபுரி
நகரத்தை அரிச்சந்திரன் கண்ணாற் கண்டான்.
உம்மை
: எண்ணும்மை; மா மதில் : உரிச்சொற்றொடர்; மாடம் -
மாளிகை. கூடம் - மேன்மாடங்களை யுணர்த்தும், மேடை என்பது காற்று
வீசுவதற்காக மாடங்கட்குமேல் உயர்த்திக் கட்டப்படுவது ஒன்று.
"மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே". அது மேடையின்
பொருளை விளக்கியது.
(146)
| |
மாதவர்
'கன்னமாபுரம் இது' எனல் |
| 251. |
இந்நகர்
எந்நகர் என்று கூறவே
முன்னவற் குணர்த்திய முனிவர் நோக்கியே
மன்னவ சொன்னஅவ் வல்லி வாழ்திரு
நன்னகர் ஈதென நயந்து கூறினார். |
(இ - ள்.)
இ நகர் எ நகர் என்று கூற - இவ்வூர் எவ்வூர் என
அரிச்சந்திரன் வினவ, முன் அவற்கு உணர்த்திய முனிவர் நோக்கி -
முன்னர் அந்த அரிச்சந்திரனுக்குச் சந்திரவதியைப்பற்றிக் கூறிய முனிவர்
பார்த்து, மன்னவ - அரிச்சந்திர அரசனே !, ஈது சொன்ன அ வல்லி வாழ்
திரு நல் நகர் என - இஃது நாங்கள் உனக்குத் தெரிவித்த அந்த
வல்லிக்கொடி போன்ற சந்திரவதி வாழ்கின்ற அழகிய நல்ல நகரம் என்று,
நயந்து கூறினார் - மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.
வல்லி : உவமையாகுபெயர். 'முன் அவற்கு உணர்த்திய
முனிவர்
நோக்கியே' - முனிவர் என்பது பல முனிவரையும் குறிக்குமேனும் ஒரு
முனிவர் கூறினார் என்று கொள்க. பலர் மன்னவற்கு சந்திரமதியைப்பற்றி
யுணர்த்தியிருப்பினும் அவர்களுள் ஒருவர் எனக் கொள்க. வல்லி :
உவமையாகுபெயர். கொடி போன்றவன் என்பது பொருள்.
(147)
| |
அரிச்சந்திரன்
கேட்டுப் புளகம் அடைதல் |
| 252. |
வல்லிதன்
நகர்இது மன்ன வாஎனாச்
சொல்லிய பொழுதினிற் றுணுக்கம் எய்தியே
அல்லியந் தாரினான் அவளி இன்புறப்
புல்லிய கலவியிற் புளகம் எய்தினான். |
(இ
- ள்.) மன்னவா - அரசனே !, இதுவல்லி தன் நகர் எனாச்
சொல்லியபொழுதினில் - இஃது சந்திரவதியின் ஊர் என்று முனிவர்கள்
சொன்னவுடன், அல்லி அம் தாரினான் - அக இதழ்களையுடைய
மலர்மாலையணிந்த அரிச்சந்திரன், அவளை இன்புறப் புல்லிய கலவியின்
புளகம் எய்தினான் - அவளை இன்பமாகக் கூடிய புணர்ச்சியின் மகிழ்ச்சி
போன்ற அகமகிழ்வு எய்தி உடலில் புளகம் அடைந்தான்.
|