|
வல்லி
: உவமையாகுபெயர்; எனா : செய்யா என்னும் வாய்பாட்டு
வினையெச்சம்; கலவியின் : தொழிலாகுபெயராய்க் கலவியினடையும்
மகிழ்ச்சிக்கு ஆயிற்று. கலவியின் - கலவித் தொழிலால் : அடைந்த
இன்பம்போல் எனப் பொருள் கொள்க. இன் : ஐந்தனுருபு ஒப்புப்
பொருளில் வந்தது. புளகம் - உடலிலுள்ள மயிர் சிலிர்த்து நிற்றல்.
(148)
| |
சந்தக்
கலி விருத்தம்
கோட்டை வாயில் அடைதல் |
| 253. |
சனம்தொடர்ந்து
பின்வரத் தடம்கடந்து சென்றுவெஞ்
சினம்தொடர்ந்த வெம்பரித்திரி சங்குதந்த மைந்தன்முன்
மனம்தொடர்ந்து கொண்டவல்லி மன்னுகன்ன மாபுரிக்
கனம்தொடர்ந்த மாமதில் கபாடவாயில் எய்தினான். |
(இ - ள்.)
சனம் தொடர்ந்து பின் வர - பரிசனங்கள் தொடர்ந்து
பின்னே வர, தடம் கடந்து சென்று - வழியினைக் கடந்துபோய்,
வெஞ்சினம் தொடர்ந்த வெம் பரித் திரிசங்கு தந்த மைந்தன் - கடுங்
கோபமும் வேகமும் கொண்ட குதிரைப் படையினையுடைய திரிசங்கு
பெற்ற மகனான அரிச்சந்திரன், முன் மனம் தொடர்ந்து கொண்ட வல்லி
மன்னு கன்னமாபுரி - முற்பட்டுத் தன் மனம் சென்று தொடர்ந்து
பற்றிக்கொண்ட வல்லிக் கொடிபோன்ற சந்திரவதி பொருந்தி வாழ்கின்ற
கன்னமாபுரியின், கனம் தொடர்ந்த மா மதில் கபாட வாயில் எய்தினான் -
மேகம் தவழ்கின்ற பெரிய மதில்களின் கதவுகளுடைய வாயிலை
அடைந்தான்.
திரிசங்கு : காரணப்பெயர்; சூரியகுலத்து அரசன்;
அரிச்சந்திரன்
தந்தை. வெஞ்சினம், வெம்பரி : பண்புத்தொகை. வல்லி : உவமை
யாகுபெயர்; மா மதில் : உரிச்சொற்றொடர், திரிசங்குவின் பொருட்டு
விசுவாமித்திரர் அந்தரத்தில் ஒரு துறக்கம் அமைத்தார். முனிவர்
சந்திரவதியின் வரலாறு கூறியபோதே அவளைப் பற்றி விடாது நின்றது
மனம் என்பது தோன்ற 'மனம் தொடர்ந்து கொண்ட வல்லி' என்றார்.
(149)
| |
வாயில்,
மதில், அகழிச் சிறப்பு |
| 254. |
மடங்கல்உற்ற
வாயிறோறும் மகரதோ ரணங்களும்
இடங்கணிப் பொறிப்பரப்பும் எண்ணிறந்த மாமதில்
கிடங்கடங்க நீலமும் கிளர்ந்தெழுந்த கஞ்சமும்
இடங்கரும் சுணங்கும்மீன் இனங்களும் பெருத்தவே. |
(இ
- ள்.) மா மதில் - பெரிய கோட்டையில், மடங்கல் உற்ற
வாயில் தோறும் மகர தோரணங்களும் - இருபக்கங்களிலும்
சிங்கங்களையுடைய வாயில்களிலெல்லாம் மகர தோரணங்களும், இடங்
கணிப் பொறிப் பரப்பும் - சங்கிலி கோத்துக் கட்டப்பட்டுள்ள பொறிகளின்
வரிசைகளும், எண் இறந்த - அளவில்லாமல் இருந்தன; கிடங்கு அடங்க
நீலமும் கிளர்ந்து எழுந்த கஞ்சமும் - அகழி முழுதும் நீலோற் பல
மலர்களும் விளங்கி உயரும்
|