|
தாமரை மலர்களும்,
இடங்கரும் சுணங்கும் மீன் இனங்களும் பெருத்த -
முதலைகளும் நீ்ர் நாய்களும் பலவகை மீன்களும் மிக்கிருந்தன.
ஏகாரம் :
ஈற்றசை. உம்மைகள் : எண்ணுப்பொருள்.
கோட்டையின்
வாயில்களின் மகர தோரணங்கள்
கட்டப்பட்டிருந்தன, சுற்றிலும் இடங்கணிப் பொறிகள்
வைக்கப்பட்டிருந்தன எனவும், அகழியில் நீலமலர் தாமரைமலர்
மலர்ந்திருந்தன, முதலையும் நீர் நாயும் மீன்கூட்டங்களும்
மிகுந்திருந்தன எனவும் கொள்க.
(150)
| 255. |
நிகரிலாத
பொற்குவட்டை உட்டிறந்து நீணிறை
நகரிஎங்கும் வைத்ததொத்த நகரும்மாட கூடமும்
சிகரநேமி வரைதிரித்த தன்புறஞ் செறித்தநீர்
மகரவாரி ஒத்தசெம்பொன் மதிலும்நீள் கிடங்குமே. |
(இ - ள்.)
நகரும் மாட கூடமும் - நகரங்களும் மாட கூடங்களும்,
நிகர் இலாத பொன் குவட்டை உள் திறந்து - ஒப்பில்லாத பொன்
மலையை உள்ளே குடைந்து, நீள் நிறை நகரி எங்கும் - நீண்ட
வரிசையான நகரத்தை எங்கணும், வைத்தது ஒத்த - பரப்பிவைத்தது
போன்றிருந்தன, செம்பொன் மதிலும் நீள் கிடங்கும் - சிவந்த
பொன்னிறமான அந்நகர மதில்களும் நீண்ட அகழிகளும், சிகர நேமி
வரை திரித்ததன் தன் புறஞ் செறித்த நீர் மகர வாரி ஒத்த
உச்சியையுடைய சக்கரவாள கிரியையும் அதற்கு அப்புறமாயுள்ள நீர்
நிறைந்த மகர மீன்களைக் கொண்ட புறக்கடலையும் போன்றிருந்தன.
ஏகாரம் :
ஈற்றசை. உள் + திறந்து - உட்டிறந்து. அந்நகரமும்
அதிலமைந்த மாடகூடங்களும் பொன் மலையைப் பிளந்து அதனுள்ளே
நகரியை எங்கணும் வைத்தது போலத் தோன்றின. மதிலும் அகழியும்
சக்கரவாள கிரியும் அதனைச் சுற்றிய பெரும்புறக் கடலும்போலத்
தோன்றின என்க.
(151)
| |
மாடத்
துகிற்கொடிச் சிறப்பு |
| 256. |
பங்கயச்ச
காயஅண்ணல் தன்குலப் பகீரதன்
அங்கண்வான கத்துநின்றொ ராறழைத்த னன்முனம்
மங்கையைப்ப யந்தமன்னன் மாநகர்க்குள் எண்ணிலாக்
கங்கைதந்து ளான்எனக் கலித்தகேத னங்களே. |
(இ
- ள்.) பங்கயச் சகாய அண்ணல் தன் குலப் பகீரதன் -
தாமரைக்கு நாயகனான சூரியகுலத்தில் தோன்றிய பகீரதன், முனம் -
முன்னொரு காலத்தில், அம் கண் வான் அகத்து நின்று ஒரு ஆறு
அழைத்தனன் - அழகிய இடத்தையுடைய ஆகாயத்திலிருந்து ஒப்பற்ற
கங்கையாற்றை அழைத்தான், மங்கையைப் பயந்த மன்னன் -
சந்திரவதியைப் பெற்ற சந்திரதய அரசன், மா நகர்க்குள் எண்ணிலாக்
கங்கை தந்துளான் என - தன்னுடைய பெரிய நகருக்குள் கணக்கற்ற
கங்கை யாறுகளை வரவழைத்துள்ளான் என்று சொல்லும் படி,
கேதனங்கள் கலித்த - வெண்மையான கொடிகள் அசைந்து ஒலித்தன.
|