|
பங்கம் - சேறு. சேற்றிலே
தோன்றிய தாமரைக்குப் பங்கயம் என்பது
காரணப் பெயர். மங்கை : ஆகுபெயர். சூரியன் தாமரையை
மலரவைத்தலின் பங்கயச் சகாயனானான். முன்னம் : முனம் எனத்
தொகுத்தல் ஆயிற்று. மாநகர் : உரிச்சொற்றொடர். இல்லா - இலா:
தொகுத்தல் ஆயிற்று. இது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
ஏகாரம்
: ஈற்றசை. கலித்த : பலவின்பால் வினைமுற்று.
(152)
| |
கூட
மாட கோபுரச் சிறப்பு |
| 257. |
விண்டலத்து
மாதர்இந்த மேதினிக் கிறங்கவும்
மண்டலத்து மாதர்வானின் வண்மைசென்று காணவும்
கொண்டல்விண் டெழச்சமைத்த கூடமாட கோபுரம்
அண்டரண்டம் ஊடறுத்த தற்குமப்பு றத்தவே.
|
(இ
- ள்.) விண் தலத்து மாதர் இந்த மேதினிக்கு இறங்கவும் -
வானுலகத்துப் பெண்கள் இந்தப் பூமியிலே வந்து இறங்கவும், மண் தலத்து
மாதர் வானின் வண்மை சென்று காணவும் . பூவுலகப் பெண்கள்
தேவருலகத்தின் செழிப்பை அங்குப் போய்ப் பார்க்கவும், கொண்டல்
விண்டு எழச் சமைத்த கூடம் மாடம் கோபுரம் - மேக மண்டலத்தைப்
பிளந்து எழும்படி உயரமாக அமைக்கப்பெற்ற கூடங்களும் மாடங்களும்
கோபுரங்களும், அண்டர் அண்டம் ஊடு அறுத்து - அடுக்காகவுள்ள
அண்டங்களையெல்லாம் ஊடறுத்து உயர்ந்து, அதற்கும் அப்புறத்த -
அதற்குமேலும் அப்பாற்பட்டுச் சென்று நின்றன.
ஏகாரம் :
ஈற்றசை; விண் + தலம் - விண்டலம்; மண் + தலம் -
மண்டலம்; கூட, மாட கோபுரம் : உம்மைத்தொகை; உயர்வுநவிற்சியணி.
உயர்ந்து அமைவதற்குக் கவி தான் ஒரு காரணத்தைக் கற்பித் துக்கூறலின்
தற்குறிப்பேற்ற அணியுமாம்.
(153)
| |
மாளிகைச்
சிறப்பு |
| 258. |
நெடியமாட
நேத்திரத்தின் நிரைவகுத்த சாளரத்
திடையின்மாதர் எழில்மு கங்கள் எங்கணும்வி ளங்குதல்
கடிகொள்வெற்பின் மீதெழுந்த கதிர்தனைத் துளைத்ததின்
நடுஉதித்த நளிர்மதிக்கு நிகரெனப்பொ லிந்தவெ. |
(இ - ள்.)
நெடிய மாடம் நேத்திரத்தின் நிரை வகுத்த சாளரத்து
இடையின் மாதர் எழில் முகங்கள் எங்கணும் விளங்குதல் - நீண்ட
மாளிகைகளின் கண் போன்ற வரிசையாக அமைக்கப்பெற்ற சன்னல்களின்
வழியே, பெண்களின் அழகிய முகங்கள் எங்கும் விளங்கித்
தோன்றுதலானது, கடி கொள் வெற்பின் மீது எழுந்த - ஒளியுள்ள
உதயகிரியின்மேலெழுந்த, கதிர் தனைத் துளைத்து அதன் நடு உதித்த -
சூரியனைத் துளைத்துக்கொண்டு அதன் நடுவிலே தோன்றின. நளிர்
மதிக்கு நிகர் எனப் பொலிந்த - குளிர்ந்த சந்திரனுக்கு ஒப்பாக விளங்கின.
|