|
| |
சந்திரதயன்
அரிச்சந்திரனை அன்புடன் வரவேற்றல் |
| 261. |
தருஇருந்த
கரனிருந்த சபைகொள்மண்ட பத்திலே
மருகன்வந்து புகுதலும்தன் மனமகிழ்ந்து மதிதயன்
அருகிருந்த அரசரோடும் ஆதனத்தி ருந்துபோய்
இருகரங்க ளிறுகநண்பின் எதிர்நடந்து தழுவினான். |
(இ
- ள்.) தரு இருந்த கரன் - கற்பகத தருவின் செயல் குடி
கொண்டிருந்த கைகளையுடைய சந்திரதயன், இருந்த சபை கொள்
மண்டபத்தில் - வீற்றிருந்த சபை கூடியிருந்த கொலுமண்டபத்தில், மருகன்
வந்து புகுதலும் - மருமகனாகிய அரிச்சந்திர மன்னன் வந்து
புகுந்தவுடனே, மகிழ்ந்து - மனம் மகிழ்ந்து, ஆதனத்திருந்து அருகிருந்த
அரசரோடும் போய் - சிம்மாசனத்திலிருந்து எழுந்து பக்கத்தில்
அமர்ந்திருந்த அரசர்களோடும் போய், நண்பின் எதிர் நடந்து - நட்போடு
நடந்து எதிர்கொண்டழைத்து, இரு கரங்கள் இறுகத் தழுவினான் -
இரண்டு கைகளாலும் இறுக்கமாகக் கட்டித் தழுவினான்.
எழுந்து
என்பது அவாய்நிலையால் வந்தது. இரு கரங்கள் :
மூன்றனுருபும் முற்றும்மையும் தொக்கன. கற்பகத்தரு தன்னை
யடைந்தோர்க்கு அவர் வேண்டிய பொருளைத் தன்னிடத்து உடனே
ஆக்கிக் கொடுப்பதுபோலச் சந்திரதயனும் வேண்டிய பொருள்களைக்
கொடுப்பன் என்பதாம். தரு வென்பது தருவின் செயலுக்காதலின்
ஆகுபெயர்.
(157)
| |
சந்திரதயன்
மனமகிழ்ச்சி |
| 262. |
முனிவருக்கும்
அரசருக்கும் முழுதும்ஆத னம்கொடுத்
தினிதுகூறி அவ்வவணி யாவரும்இ ருந்தபின்
அனிகவேலை மதிதயன்ற னாதனத் திருந்துளம்
கனியவாச முகம்மலர்ந்து கண்களிப்ப நோக்கினான். |
(இ - ள்.)
முனிவருக்கும் அரசருக்கும் முழுதும் ஆதனம்
கொடுத்து - அரிச்சந்திரனோடு வந்த முனிவர்களுக்கும் அரசர்களுக்கும்
எல்லோரும் இருக்கும்படி இருக்கை அளித்து, இனிது கூறி - இனிய
நல்வரவு மொழிகளைச் சொல்லி, அவ்வவண் யாவரும் இருந்த பின்னர்
- அவரவர்க்குரிய இடங்களில் எல்லோரும் அமர்ந்தபின், அனிக வேலை
மதிதயன் - படைக் கடலைக்கொண்ட சந்திரதயன், தன் ஆதனத்து
இருந்து உளம் கனிய வாச முகம் மலர்ந்து கண் களிப்ப நோக்கினான் -
தன்னுடைய சிங்காதனத்தில் இருந்து மனம் உருகத் திருவாழ்கின்ற முகம்
மகிழ்ச்சியால் மலர்ந்து கண்கள் குளிர்ந்து விளங்க அரிச்சந்திரனைப்
பார்த்தான்.
உம்மைகள் முன்னுள்ளன எண்ணுப்பொருளன. பின்னையது
முற்றும்மை. அவண் + அவண் = அவ்வவண்; அவண் + யாவர் =
அவணியாவர் "தன்னொழி மெய்ம்முன் யவ்வரின், இகரம் துன்னும் என்று
துணிநரும் உளரே" என்ற விதியின்படி இகரம் வந்தது. அனிக வேலை -
முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை.
(158)
|