| |
எல்லோரும்
அரிச்சந்திரனை இமையாது நோக்குதல் |
| 263. |
வெற்றிமன்ன
னும்மணம் விரும்பிவந்த மன்னரும்
சுற்றிநின்ற மாதரும் துலங்குதார் அமைச்சரும்
பற்றியுற் றெதிர்ந்தகண்கள் பசுமரத்தி லாணிபோல்
சுற்றிமைக்க லாதுவள்ளல் தன்முகத்தை நோக்கினார். |
(இ
- ள்.) வெற்றி மன்னனும் - வெற்றி அரசனாகிய சந்திரதயனும்
மணம் விரும்பி வந்த மன்னரும் - திருமணத்தை மகிழ்ச்சியோடு காணவந்த
மன்னர்களும், சுற்றி நின்ற மாதரும் - சுற்றி நின்ற பெண்களும், துலங்கு
தார் அமைச்சரும் - விளங்குகின்ற மாலையணிந்த மந்திரிகளும், பற்றி
உற்று எதிர்ந்த கண்கள் பசுமரத்தில் ஆணிபோல் சற்று இமைக்கலாது -
விருப்புற்றுப் பொருந்தி நேர் எதிராகப் பார்த்த கண்களைப் பச்சைமரத்தில்
அறையப்பெற்ற ஆணிபோல் பதியவைத்துச் சிறிதும் இமைகொட்டாமல்,
வள்ளல் தன் முகத்தை நோக்கினார் - அரிச்சந்திர வள்ளலுடைய
முகத்தைப் பார்த்தவண்ணமாயிருந்தார்கள்.
தன்
: சாரியை; உவமையணி, பசுமரத்திலாணிபோல் என உவமை
வந்ததால். ஆண்மையும் எழிலும் அமைந்த சிறந்த மன்னன்
அரிச்சந்திரனாதலால் யாவரும் அவனையே நோக்கினர் என்பது குறிப்பு.
(159)
| |
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அரிச்சந்திரனை யாவரும் வியத்தல் |
| 264. |
மாந்தரும்
மாத ராரும் மன்னரும் அமைச்சர் தாமும்
ஏந்தலைப் பார்த்த கண்கள் இமைத்திலர் பிறிது நோக்கார்
மாந்தளி ரனைய மேனி வாணுதல் இரதி என்பாள்
காந்தனும் அவனே வேறு காமனும் உளனோ என்பார்.
|
(இ
- ள்.) மாந்தரும் மாதராரும் மன்னரும் அமைச்சர் தாமும்
ஏந்தலைப் பார்த்த கண்கள் இமைத்திலர் பிறிது நோக்கார் - ஆடவரும்
பெண்களும் அரசரும் அமைச்சரும் அரிச்சந்திரனைப் பார்த்த கண்கள்
இமைகொட்டாதவராய் மற்றொன்றையம் பாராமல் இருந்தனர், மாந் தளிர்
அனைய மேனி வாள் நுதல் இரதி என்பாள் - மாந்தளிர்போன்ற
மேனியையும் ஒளிபொருந்திய நெற்றியையுமுடைய இரதி போன்றவளான
சந்திரமதிக்கு, காந்தனும் இவனே வேறு காமனும் உளனோ என்பார் -
நாயகனும் இவனே இவனையன்றி மன்மதனும் இருக்கின்றானோ என்றும்
சிந்தித்தனர்.
ஓகாரம்
: எதிர்மறை; காந்தனும் காமனும் - உம்மைகள் உயர்வு
சிறப்பு; ஏனைய உம்மைகள் எண்ணுப்பொருளன. இமைத்திலர், நோக்கார்
: முற்றெச்சங்கள்; சந்திரமதியை இரதி என்றதற்கேற்ப அரிச்சந்திரனைக்
காமன் என்றனர். ஏந்தல் : ஆண்பால் சிறப்புப்பெயர், பிறிது : அஃறிணை
ஒன்றன்பாற்பெயர்.
(160)
|