|
| |
சந்திரமதிபாற்
பாங்கி யொருத்தி செல்லுதல் |
| 269. |
வாரணத்
தண்ண லேக மதிதய னவையி லுற்ற
காரணம் அனைத்தும் கேட்டுக் காரிகை ஒருத்தி ஓடித்
தோரண வாயி னீங்கித் துடிஇடை அமுதச் செஞ்சொற்
பூரணக் களபக் கொங்கைப் பூவைதன் கோயில் புக்காள். |
(இ
- ள்.) அண்ணல் வாரணத்து ஏக - அரிச்சந்திரன் யானை
மேலேறித் தான் தங்கும் இடம் செல்ல, மதிதயன் அவையில் உற்ற
காரணம் அனைத்தும் காரியை ஒருத்தி கேட்டு - சந்திரதயன் சபையில்
நிகழ்ந்த செயல்களை எல்லாம் ஒரு பெண் கேட்டு, ஓடி தோரண வாயில்
நீங்கி - ஓடிப்போய்த் தோரணங்கள் கட்டப்பட்ட வாசலைக் கடந்து, துடி
இடை அமுதச் செஞ்சொல் பூரணக் களபக் கொங்கைப் பூவை தன்
கோயில் புக்காள் - உடுக்கைபோலும் இடையையும் அமுதம்போலும்
திருந்திய சொல்லையும், பூரித்து வளர்ந்த சந்தனம் பூசிய
கொங்கைகளையுமுடைய பூவைபோன்ற சந்திரமதியின் அரண்மனைக்குள்
புகுந்தாள்.
பூவை : ஆகுபெயர்; துடியிடை, அமுதச் சொல் : உவமைத்
தொகைகள். செஞ்சொல் : பண்புத்தொகை.
(165)
| |
சந்திரமதி
பாங்கியை வந்த காரணங் கேட்டல் |
| 270. |
புக்கவள்
தன்னை நோக்கிப் பொற்கொடி அதிச யித்திங்
கிக்கணத் தோடி வந்த அருத்திஎன் இயம்பு கென்ன
அக்கணத் தரிவை செம்பொன் அடியைத்தன் முடியிற் சூட்டிப்
பக்கமும் இடமும் பார்த்துப் பவளவாய் பதைத் துரைப்பாள். |
(இ - ள்.)
புக்கவள் தன்னை நோக்கி பொற்கொடி அதிசயித்து
இங்கு இக் கணத்து ஓடி வந்த அருத்தி என் இயம்புக என்ன - தன்
அரண்மனையில் புகுந்தவளைப் பார்த்துச் சந்திரமதி ஆச்சரியமுற்று
இவ்விடத்திற்கு இவ்வமயத்தில் விரைந்து ஓடிவந்த காரணம் என்ன
சொல்லுவாய் என்று கூற, அக் கணத்து - அப்பொழுது, அரிவை
செம்பொன் அடியைத் தன் முடியில் சூட்டி பக்கமும் இடமும் பார்த்து -
சந்திரமதியின் செம்பொற்றிருவடிகள் தன் முடியிற் பொருந்தும்படி வணங்கி
நாலுபக்கமும் எல்லா இடங்களையும் நோக்கி ஒருவரும் இல்லாமை கண்டு,
பவளவாய் பதைத்து உரைப்பாள் - பவளம்போன்ற வாயையுடைய அப்
பெண் பதை பதைத்துச் சொன்னாள்.
பொற்கொடி, பவளவாய் : அன்மொழித்தொகைகள்,
இயம்பு கென்ன
: இயம்புக என்ன என்பதன் தொகுத்தல்.
(166)
| |
பாங்கி
அரிச்சந்திரனைப்பற்றிச் கூறல்
|
| 271. |
செந்திரு
அனையாய் உன்னைத் திருமணம் முடிக்க வேண்டி வந்தனர் அநேகர் நம்தம் மன்னவன்
சபையிற் புக்கார் |
|