|
|
அந்தமன்
னவர்கள் தம்மில் அடல்அரிச் சந்தி ரன்தன்
சுந்தர முகங்கண் டிங்கே வரமனம் துணிந்தி லேனே. |
(இ
- ள்.) செந்திரு அனையாய் - செம்மையான இலக்குமி
போன்றவளே! உன்னைத் திருமணம் முடிக்க வேண்டி வந்தனர் அநேகர்
- உன்னைத் திருமணஞ்செய்ய விரும்பி வந்தனர் பல அரசர்கள், நம்தம்
மன்னவன் சபையில் புக்கார் - வந்து நம்முடைய அரசன் சபையை
அடைந்தார்கள், அந்த மன்னவர்கள் தம்மில் அடல் அரிச் சந்திரன்தன்
சுந்தர முகம் கண்டு - அவ்வரசர்களில் வெற்றி பொருந்திய
அரிச்சந்திரனுடைய அழகிய முகத்தைப் பார்த்து, இங்கு வர மனம்
துணிந்திலேன் - நான் அவனை விட்டு இங்கு வருவதற்கு மனந்
துணியவே இல்லை.
அரிச்சந்திரன் அழகில் ஈடுபட்டு அவனைப் பார்த்தவண்ணமே நிற்க
விரும்பினேன்; எனக்கு வர மனந்துணியவில்லை என்றாள். வந்தனர் :
முற்றெச்சம்; துணிந்திலேன் : தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று.
துணி : பகுதி; த் : சந்தி; ந் : ஆனது விகாரம்; த் - இறந்த கால
இடைநிலை; இல் : எதிர்மறை இடைநிலை. ஏன் : தன்மை ஒருமை வினை
முற்று விகுதி. சுந்த முகம் : பண்புத்தொகை.
(167)
| |
மார்பு
தோள் விழி வனப்புக் கூறல் |
| 272. |
உடுக்குநீ
ருலகம் ஏழும் ஒன்றின்மேல் ஒன்றை வைத்தே
அடுக்குநீள் புயமும் செய்யாள் ஆவியும் மனமும் தாவிப்
படுக்கும்வாள் விழியும் மார்பும் பரிவிலர் மகிழ நாளும்
கொடுக்கும்வார் கரமும் மாதர் உளம்எலாம் கொள்ளை
கொள்ளும்.
|
(இ - ள்.)
நீர் உடுக்கும் உலகம் ஏழும் ஒன்றிம்மேல் ஒன்றை
வைத்து அடுக்கு நீள் புயமும் - கடல்நீர் சூழ்ந்த இவ்வேழு
உலகங்களையும் ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து அடுக்கியதுபோன்று
உயர்ந்த தோள்களும், செய்யாள் ஆவியும் மனமும் தாவி படுக்கும் வாள்
விழியும் மார்பும் - திருமகளுடைய உயிரும் மனமும் தாவிச் சென்று
படுத்திருக்கும் சிறப்பமைந்த கண்களும் மார்பும், பரிசிலர் மகிழ நாளும்
கொடுக்கும் வார் கரமும் - இரவலர் மகிழும்படி எந்நாளும் வழங்குகின்ற
நீண்ட கைகளும், மாதர் உளம் எலாம் கொள்ளை கொள்ளும் -
பெண்களின் உள்ளம் முழுவதையும் கவரும்.
ஏழும் : முற்றும்மை; புயமும் ஆவியும் மனமும் விழியும்
மார்பும் :
எண்ணும்மைகள்; விழி உயிரைக் கவர்ந்தது, மனம் மார்பைக் கவர்ந்தது
என்பதாம். ஆவியும் மனமும் படுக்கும் விழியும் மார்பும் : நிரனிறைப்
பொருள் கொள்க. உளம் எலாம் : தொகுத்தல். திருமகள் உயிரும் மனமும்
கண்ணிலும் மார்பிலும் இருந்தன எனக் கொள்க. மன்னர் விழிகளில்
கருணைத் திருவும், மார்பிற் செல்வத் திருவும் அமர்ந்திருப்பள் என்று
கூறுவது இலக்கிய மரபு. ஆதலால் இவ்வாறு கூறினர். திருமகள் தானே
சென்று கண்ணிலும் மார்பிலும் கலந்திருந்தாள் என்பது கருத்து.
(168)
|