|
(இ
- ள்.) இதையம் ஊடு உருக்கும் இன்பத்து இறைவனை உற்று
நோக்கி - பெண்களின் உள்ளத்தை ஊடுருவிச் சென்று உருக்கும்
காண்டற்கினிய அரிச்சந்திர அரசனைக் கூர்ந்து நோக்கியபின், ததையும்
மா மலர்த் தார் வேந்தர் தங்களைச் சூழ நோக்கில் - நெருங்கிய நறுமலர்
மாலையணிந்த ஏனைய மன்னர்களை ஆராய்ந்து பார்த்தால், வேலைப்
புவியினைப் புதை இருள் கடிந்து - கடல் சூழ்ந்த உலகை மூடும் இருட்டை
நீக்கி, விளக்கும் உதயனைக் கண்ட கண்கட்கு - ஒளியினை விளக்கும்
சூரியனைக் கண்ட கண் கொண்டு, உடுக்களைக் கண்டது ஆமே -
விண்மீன்களைப் பார்த்தது போலாம்.
இச்செய்யுள்
உவமையணி. ஆம் : உவம உருபு; "ஆள்வாரிலி
மாடாவேனோ" என்பதுபோல, அரிச்சந்திரன் அழகொளியுள்ள சூரியன்
போல்வான் : ஏனையரசர் நட்சத்திரங்கள் போல்வர் என்பதாம். மா மலர்
: உரிச்சொற்றொடர். மன்னன் அரிச்சந்திரனை நோக்கிய விழிகட்கு மற்றை
மன்னர்களை நோக்குவது வெயிலோனை நோக்கியபின் விண்மீன்
நோக்கியதுபோல ஒளி மழுங்கித் தோன்றும் என்பது.
(171)
| |
சந்திரமதி
அரிச்சந்திரன்மேற் காதல் மிகுதல் |
| 276. |
மன்னைநே
ரிடையாள் கூறக் கேட்டலும் வேந்தன் பாவை
தன்னையும் மறந்தாள் இட்ட சங்கமும் கலையும் நீத்தாள்
அன்னையை மறந்தாள் பேசும் வாசகம் அயர்ந்தாள் வேறு
பின்னையும் இழந்தாள் காதல் பெற்றதொன் றன்றி யின்றே. |
(இ - ள்.)
வேந்தன் பாவை மின்னை நேர் இடையாள் கூறக்
கேட்டலும் - சந்திரதயன் மகளாகிய மின்னலைப் போன்ற
இடையையுடைய சந்திரமதி அரிச்சந்திரன் அழகைப்பற்றிச் சொல்லக்
கேட்டவுடன், தன்னையும் மறந்தாள் - தன்னை மறந்தாள், இட்ட சங்கமும்
கலையும் நீத்தாள் - கைகளில் அணிந்த சங்கு வளையல்களையும்
இடையில் அணிந்த ஆடையையும் கழலவும் நெகிழவும் விட்டாள்,
அன்னையை மறந்தாள் - தாயை மறந்தாள், பேசும் வாசகம் அயர்ந்தாள்
- பேசும் பேச்சையும் மறந்தாள், வேறு பின்னையும் இழந்தாள் - வேறு
மற்றவைகளையும் விட்டாள், காதல் பெற்றது ஒன்று அன்றி இன்றே -
காதல் ஒன்றனையன்றி வேறு ஒன்றும் இல்லையானாள்.
"முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"
என்னும் திருமறைச் செய்யுளை ஒப்பு நோக்குக.
இன்று : குறிப்பு வினைமுற்று;
ஏகாரம் :
ஈற்றசை.
கால் ஒன்றன்றி மற்றுள்ள எல்லாவற்றையும் மறந்தாள்
என்பது
கருத்து.
(172)
|