|
முற்காலம்
கடலில் எழுந்த நஞ்சு எங்கும் பரவியது போலவும்,
சந்திரமதி உள்ளத்தில் எழுந்த காம வெந்நோய் காய்ந்து கருகிப் பரவியது
போலவும் இருள் நிறைந்தது என்று கற்பித்தார். இது தற்குறிப்பேற்ற வணி.
(178)
| |
வெண்ணிலாத்
தோற்றம் |
| 283. |
முன்னரே
பொருது வெல்லாத் தலைவரை முனிந்து செங்கோன்
மன்னவர் கோபம் கொண்டு வாள்விதிர்த் தெழுந்த தேபோல்
இன்னமும் இவள்தன் ஆவி இறந்தில தென்று சீறித்
துன்இருள் இரிய நூறி எழுந்தது சுடர்வெண் திங்கள். |
(இ - ள்.)
முன்னரே பொருது வெல்லத் தலைவரை முனிந்து
செங்கோல் மன்னவர் கோபம் கொண்டு வாள் விதிர்த்து எழுந்ததே
போல் - முன்னே சிற்றரசரால் போர்புரிந்து வெல்லமுடியாத கொடிய
வரை அடக்கக் கோபித்துச் செங்கோல் அரசர் சீற்றங்கொண்டு வாள்
வீசிக்கொண்டு எழுந்ததுபோல, இன்னமும் இவள்தன் ஆவி இறந்திலது
என்று - இன்னமும் சந்திரமதியின் உயிர் போகவில்லை என்று, சீறி -
சீற்றங்கொண்டு, துன் இருள் இரிய நூறிச் சுடர் வெண் திங்கள் எழுந்தது
- நிறைந்த இருள் கெடும்படி அழித்து ஒளி பொருந்திய வெண்ணிலாச்
சந்திரன் எழுந்தது.
மலை என்பது முதலில் வந்தது, பின் இருள் வந்தது;
அதன்பின்
சந்திரன் வந்தான். சந்திரன் வந்தது செங்கோன்மன்னவன் வாள் வீசி
எழுந்ததுபோல இருந்தது. மாலையை முதலில் விடுக்கப்பட்ட படைத்
தலைவனாகவும், இருளை இரண்டாவது விடுக்கப்பட்ட படைத்
தலைவனாகவும் இவர்களிருவரும் சந்திரமதியைக் பொருது வெற்றி காண
வியலாது நிற்பதையறிந்த சந்திரன் சந்திரமதிமேற் போர் செய்வதற்கு வந்த
செங்கோன் மன்னனாகவும் கொள்க. வாள் விதிர்த்து - வாளாயுதத்தை வீசி
என்றும், ஒளி வீசி என்றும் இரு பொருள் கொள்க. செங்கோன் மன்னன்
. . . . . எழுந்ததுபோல என உவமை வந்ததால் இஃது உவமை யணி.
(179)
| |
நிலாக்
காட்சி வருணனை |
| 284. |
இருளைஒத்
திலங்கும் மேனி இறைகடல் கடைந்த காலம்
பொருளைஉற் றிடாத எல்லாம் புரந்தரா தியர்க்கு நல்கி
உருளவே திரட்டி வாரி உள்வைத்த அமுத சாரத்
திரளைமேன் மிதந்த தென்னத் திங்கள்வந் தெழுந்த தன்றே.
|
(இ
- ள்.) இருளை ஒத்து
இலங்கும் மேனி இறை கடல் கடைந்த
காலம் - இருள்போன்ற திருமேனியுடைய திருமால் திருப்பாற்கடலைக்
கடைந்த பொழுது, உற்றிடாத பொருளை எல்லாம் - மனம் விரும்பாத
பொருள்களை எல்லாம், புரந்தர ஆதியர்க்கு நல்கி - இந்திரன் முதலிய
தேவர்களுக்குக்கொடுத்து உருளவே திரட்டி வாரியுள் வைத்த அமுத சாரத்
திரளை - உருண்டையாகத் திரட்டிக் கடலுள் மறைத்துவைத்த அமுதத்தின்
சாரத் தொகுதி, மேல் மிதந்தது என்ன - கடள்மேல் மிதந்த தன்மையைப்
போல, திங்கள் வந்து எழுந்தது - சந்திரன் வந்து தோன்றியது.
|