பக்கம் எண் :


148

      சந்திரமதியின்மீது காமன் கணை ஏவுதல்
286. கருப்புவார் சிலையை ஊன்றிக் கால்வளைத் திசைகள் பாடும்
சுருப்பு நாணேற்றிக் கஞ்சம் தளவுடன் சோகம் சூதம்
அருப்புவார் கணைக டூணி அகத்திடை எடுத்தொன் றொன்றா
லிருப்பினால் வருந்து மானை வெவ்வினைப் பூசல் இட்டான்.

     (இ - ள்.) கருப்பு வார் சிலையை ஊன்றி - மன்மதன் தனது
கரும்பாலாகிய நீண்ட வில்லை ஊன்றி, கால் வளைத்து - அதன் இரு
கால்களையும் வளைத்து, இசைகள் பாடும் கருப்பு நாண் ஏற்றி - பண்
பாடும் வண்டுகளாலாகிய நாணை அந்த வில்லிற் பூட்டி, கஞ்சம் தளவுடன்
அசோகம் சூதம் அருப்பு வார் கணைகள் தூணி அகத்திடை ஒன்று
ஒன்றாக எடுத்து - தாமரை முல்லை அசோகம் மா இவைகளின்
அரும்புகளாகிய நீண்ட அம்புகளை அம்பறாத்தூணியிலிருந்து ஒன்று
ஒன்றாக எடுத்து, விருப்பினால் வருந்து மானை வெவ்வினைப் பூசல்
இட்டான் - காதலால் வருந்துகின்ற மான் போன்றவளாகிய சந்திரமதி மேற்
கொடிய போர் புரிந்தான்.

     தாமரை, முல்லை, அசோகம், மா, நீலம் என்பன மன்மதனின்
ஐம்பாணங்கள். கரும்பு, சுரும்பு, அரும்பு எதுகை நோக்கியும் வருமொழி
நோக்கியும் வன்தொடராயின.

     ஐந்து பாணங்களில் நான்கினை மட்டும் விடுத்தான் மன்மதன்
என்றார். நீலமலர்க்கணையை விடுத்திலன், அக் கணை கொல்லும் என்பது
கருதி கொல்லாமல் வருத்தினான் என்று கொள்க. மன்மதன்
கணைகளைந்தும் ஐந்து வினை செய்யும் என்பது கவி மரபு.

இதனை,

     "நினைக்கு மரவிந்தம் நீள்பசலை மாம்பூ
     வனைத்துணவு நீக்கு மசோகு - வனத்திலுறு
     முல்லை கிடைகாட்டு மாதே முழுநீலங்
     கொல்லுமத னம்பின் குணம்"

என்ற செய்யுகளால் அறிக.
                                                   (182)

  காதல் நோயால் வருந்தும் சந்திரமதியின் கூற்று
287. மாரவேள் பகழி வாரி வல்லியின் உடலை முற்றும்
ஈரவே திங்கட் செந்தீ எரிக்கவே எரிய தாகி
வீரவே ளனையான் தந்த வேட்கைமீ தூரக் கண்ணீர்
சோரவே அமளி மீது சுழன்றுவீழ்ந் தினைய சொல்வாள்.

     (இ - ள்.) மார வேள் பகழி வாரி வல்லியின் உடலை முற்றும் ஈர
- இவ்வாறு மன்மதன் தன் அம்புகளைக் கைகளால் வாரி வாரிச்
சந்திரமதியின் உடலினை முழுதும் துளைக்கவும், திங்கள் செந்தீ எரிக்க -
சந்திரன் தன் நிலாக் கதிரால் எரிக்கவும், வீர வேள் அனையான் தந்த
வேட்கை - வீரமிகுந்த மன்மதனைப் போன்ற அரிச்சந்திரன் கொடுத்த
காதல்,