|
எரியது ஆகி மீதூர
- தீயாகி மேலும் மேலும் கொதித்து எழ, கண்ணீர்
சோர - கண்ணீர் வடிய, அமளிமீது சுழன்று வீழ்ந்து - படுக்கையின்மேல்
மயங்கிச் சுழன்று விழுந்து, இனைய சொல்வாள் - இவ்வாறு
சொல்லலானாள்.
ஏனையர்க்குத்
தண்ணிலவு குளிர்ச்சியாயிருக்கும். காதல்
நோயுற்றார்க்குச் செந்தீப்போல வெம்மையாயிருக்கும். இனைய :
பலவின்பால் அஃறிணைப் பெயர்.
(183)
| |
சந்திரமதி
நிலவைப் பழித்தல்
கலி விருத்தம் |
| 288. |
கண்ணிலாப்
பாதகக் காமன் எய்தவெம்
புண்ணில்ஆ ருயிர்ப்பொடித் தகலப் போனவா
றெண்ணிலா தெனைச்சினந் தெழுந்த வெவ்வினை
வெண்ணிலா வேஇது வீர மல்லவே. |
(இ - ள்.)
கண் இலாப் பாதகக் காமன் எய்த வெம் புண்ணில் -
இரக்கமில்லாத கொடிய மன்மதன் மலர்வாளியால் எய்த வெம்மை யான
புண்ணிய வழியே, ஆருயிர் பொடித்து அகலம் போனவாறு - என்னுடைய
அருமையாகிய உயிர் பொடிப் பொடியாய்ச் சிதறி உடம்பை விட்டு
நீங்கிப்போன தன்மையை, எண்ணிலாது - எண்ணாமல், எனைச் சினந்து
எழுந்த வெவ்வினை வெண்ணிலவே - என்னைக் கோபித்து எழுந்த
கொடுந்தொழில் புரியும் வெண்மையாகிய சந்திரனே, இது வீரம் அல்லவே
- இவ்வாறு உயிரற்ற உடலைச் சீறி எழுந்து எரிப்பது வீரச்செயல் அன்று
(என்று சந்திரமதி சந்திரனை நோக்கிக் கூறினாள்.)
கண் : கண்ணோட்டத்திற் காதலின் ஆகுபெயர்;
இலா : தொகுத்தல்,
ஈறுகெட்ட எதிர்மறைக்குறிப்புப் பெயரெச்சம்; ஆருயிர் : பண்புத்தொகை;
அருமை + உயிர். எண்ணிலாது : எதிர்மறை வினையெச்சம்; வெவ்வினை :
பண்புத்தொகை.
(184)
| |
வேறு |
| 289. |
உன்னைக்
கொன்றன் றுருவிலி யாக்கினான்
தன்னைக் கொல்லுவ தாண்மைத் தனம் அலால்
பின்னைக் கொல்வதென் பெண்பிறப் பாகிய
என்னைக் கொல்லுவ தேழைமைப் பாலதே. |
(இ
- ள்.) அன்று உன்னைக் கொன்று - (மன்மதனே!) முற்
காலத்தில் உன்னைக் கொன்று; உருவுஇலி ஆக்கினான் தன்னை -
உருவம் இல்லாதவன் ஆக்கிய சிவபெருமானை, கொல்லுவது
ஆண்மைத்தனம் அலால் - கொல்லுவது வீரத்தனம் ஆகுமேயன்றி,
பின்னைக் கொல்வது என் - வேறு மற்றவர்களைக் கொல்வது என்ன
பயன் விளைக்கும்?, பெண் பிறப்பாகிய என்னைக் கொல்லுவது ஏழையைப்
பாலதே - மேலும் பெண்பாலாகிய என்னைக் கொல்வது அறிவின்மையே
ஆகும்.
|