|
அலால்
: எதிர்மறைக்குறிப்பு வினையெச்சம்; என் : வினாவினைக்
குறிப்புமுற்று, என் என்றாகி இன்மை குறித்து நின்றது.
ஏகாரம் :
தேற்றம்.
(வரலாறு) சிவபெருமான் யோகத்திலிருந்தபோது, சூரனால் இடருற்ற
தேவர், சிவனால் ஒரு திருக்குமரனைத் தோற்றுவித்துச் சூரனைக் கொல்ல
எண்ணினர்; உயிர்க்குயிராகிய இறைவன் யோகிருத்தலின் தேவர் முதலிய
யாவரும் போகத்தில் விருப்பமில்லாதிருந்தனர். சிவபெருமான் யோகத்தைக்
கலைத்து அவனைப் போகத்தில் விருப்ப முறச் செய்ய விண்ணவர் வேளை
ஏவினர். மன்மதன் சென்று சிவபெருமானை மயக்க முயன்றான். இறைவன்
நெற்றிக்கண்ணைத் திறந்து அதன் தீயால் மன்மதனை எரித்துச்
சாம்பலாக்கினான். பின் மன்மதன் மனைவியாகிய இரதி சிவபெருமானைப்
பணிந்து வணங்கித் தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டுமென்று வேண்ட,
அவள் கண்ணுக்கு மட்டும் அவன் உருவுடன் தோன்றும்படி செய்தார்.
(185)
| 290. |
உருவக்
காமன் துணித்த உடல்தனைச்
செருவில் கொல்ல எழுந்தவிண் திங்களே
ஒருவற் கீவதங் கோருயி ரன்றியெற்
கிருவர்க் கீய இரண்டுஉயிர் இல்லையே. |
(இ - ள்.)
உருவக் காமன் துணித்த உடல்தனை - அழகிய உருவ
முள்ள மன்மதன் புண்படுத்திய உடலை, செருவில் கொல்ல எழுந்த விண்
திங்களே - போர்புரிந்து கொல்வதற்கு எழுந்த வானிலுள்ள சந்திரனே.
ஒருவற்கு ஈவது அங்கு ஓர் உயிர் அன்றி - உங்களில் ஒருவனுக்குக்
கொடுப்பதற்கு ஓர் உயிர் இருக்கிறதே அன்றி, எற்கு இருவர்க்கு ஈய
இரண்டு உயிர் இல்லை - என்னிடம் உங்கள் இருவர்க்குங் கொடுப்பதற்கு
இரண்டு உயிர் இல்லை.
ஏகாரம் :
ஈற்றசை. தன் : பகுதிப்பொருள் விகுதி; தனை
தொகுத்தல் விகாரம்.
(186)
| 291. |
முன்னி
னைந்தலர் தொட்டவன் மூண்டபோர்
தன்னி னைந்து தளர்ந்தஎன் மேனியைத்
தின்னி நின்சலத் தின்கலைத் திங்களே
என்னி னைந்தெனை இப்படிக் காய்கின்றாய்?
|
(இ
- ள்.) முன்னின் ஐந்து அலர் தொட்டவன் - என் முன்னின்று
ஐம்பூதங்கணைகளை எய்தவனாகிய மன்மதனுடன், மூண்டபோர் தன்னின்
நைந்து - தொடுத்த போரில் மெலிந்து, தளர்ந்த என் மேனியை -
தளர்ந்திருக்கிற என் உடம்பை, கலைத்திங்களே - பதினாறு கலைகளோடு
பொருந்திய சந்திரனே, தின்னி - தின்கிறாய், நின் சலத்தின் என் நினைந்து எனை
இப்படிக் காய்கின்றாய் - உன் கோபத்தினால் என்ன நினைத்து
என்னை இப்படிச் சுடுகின்றாய் ?
தின்னி
: முன்னிலை ஒருமை வினைமுற்று. காமன் போரினால்
தளர்ந்த என்னுடலை ஏன் தின்னுகின்றாய். சுடுகின்றாய் திங்களே! என்று
புலம்பினாள் சந்திரமதி !
(187)
|