பக்கம் எண் :


15

     (இ - ள்.) கள்ளம் கொலை கள் புலை காமம் என்ற ஐந்தும்
அற்றார்க்கு - களவு, கொலை, கள்ளுண்ணல், ஊன் உண்ணல், நெறியற்ற
பெண்ணாசை ஆகிய ஐங்குற்றங்களையும் ஒழித்த பெரியவர்களுக்கு,
உள்ளம் தெளிந்தோர் தரும் உத்தம தானம் என்ன - மனத்தில் தெளிந்த
உணர்வுடையோர் கொடுக்கின்ற சிறந்த கொடையைப் போல, வெள்ளம்
பள்ளம் திடர் மால் வரை கானகப் பக்கம் எங்கும் பெருகிப் பரந்து ஓடி
விரைந்த - மழை வெள்ளமானது பள்ளங்களிலும் மேடுகளிலும் உயர்ந்த
மலைகளிலும் காடுகளின் பக்கங்களிலும் எங்கும் பெருகிப் பரவி ஓடி
வேகத்தோடு பாய்ந்தது.

     உயர்ந்தோர்க்குச் செய்யும் அறம் பெரும்பயன் அளிக்கும் என்பதை,
"சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் திலம் அளவே செய்திடுனும்
நிலம் மலைபோல் திகழும்," என்னும் சிவஞான சித்தியார் திருவாக்கால்
காண்க. "தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப்
போர்த்து விடும்" என்ற நாலடியார் கருத்தும் அறிக. உத்தமதானம் பெருகுவதுபோல வெள்ளம் பெருகியது என உவமை கூறியதால் இஃது
உவமையணி.
                                                     (6)

     வெள்ளம் சரயு ஆற்றில் சேர்தல்
21. கருவிக் கணமா மழைபெய்து கலித்த வெள்ளம்
பரவிப் பலகோ டிபருப்பதக் கோடோ டித்தாங்
கருவித் திரள் கடங்காதிரைத் தோடி ஆர்த்துச்
சரயுத் தனிலே தலைவைத்துச் சரித்த தன்றே.

     (இ - ள்.) கருவிக் கண மாமழை பெய்து கலித்த வெள்ளம் பரவிப்
பலகோடி பருப்பதக் கோடு ஓடி - உலகவாழ்விற்குக் காரணமாகிய
மேகங்களின் கூட்டம் மழை பொழிதலால் பேரொலியோடு சென்ற
பெருவெள்ளமானது எங்கும் பரவிப் பல மலைச்சிகரங்களிலிருந்து வழிந்து
ஓடி தாங்கு அருவித் திரள் புக்கு அடங்காது இரைத்து ஓடி ஆர்த்து -
மலைகள் தாங்கிக்கொண்டு நிற்கின்ற அருவிக் கூட்டங்களில் புகுந்து,
சிற்றாறுகள் அடங்காமையால் கற்களினிடையே பேர் இரைச்சலிட்டு ஓடி
ஆரவாரித்து, சரயுத்தனிலே தலை வைத்துச் சரித்தது - சரயு ஆற்றில்
பாய்ந்து பின் நடந்தது.

     மாமழை : உரிச்சொற்றொடர்; அன்று, ஏ : அசைகள். மாமழை, கரிய
மேகம், கணம் - கூட்டம். பல கோடி என்பது அளவில்லாமையைக்
குறித்தது. வெள்ளம், பரவி, ஓடி, புக்கு, இரைத்தோடி, ஆர்த்துத்
தலைவைத்துச் சரித்தது என வினைமுடிவு செய்க.
                                                     (7)

22. ஆரம் குளவஞ்சி அசோகு பலாசந் தேவ
தாரம் வகுளம் கடுச்சண்பகம் சாதி கன்னி
காரம் சுரபுன்னை கடம்புகச் சூரம் வேய்கர்ப்
பூரம் பணையொடு புரண்டிடப் போய தன்றே.