|
(இ
- ள்.) திங்களே - சந்திரனே ! வெங்கை ஆதபன் வீழ்தலும் -
வெப்பமான கதிர்களையுடைய சூரியன் மறைந்தவுடனே, யான் உனைச்
செங்கை கூப்பிய தீவினை நோக்கியோ - நான் உன்னைச் செங்கை கூப்பி
ஒவ்வொரு நாளும் தொழுத தீய செய்கையை ஆராய்ந்தோ, அங் கையால்
- அழகிய உனது கையால், ஆர் அழல் கொள்ளி எடுத்து - நிறைந்த
தீக்கொள்ளிபோன்ற நிலவினைக்கொண்டு, கொங்கை மீது கொளுத்தினை
- என் தனங்களின்மேற் சுடுகின்றாய்.
வெங்கை : பண்புத்தொகை; அகம் + கை - அங்கை; ஆரழல் :
பண்புத்தொகை, சந்திரமதி திங்களை நோக்கிச் 'சந்திரனே ! உன்னை
வணங்கி எனக்கு இன்பத்தைக் கொடாமல் தீக்கொள்ளி போன்ற
நிலவினால் என் கொங்கையைச் சுட்டுத் துன்புறுத்துகின்றாய்; இது தகுமா?'
என்று புலம்பினாள்.
(190)
| |
காதற்கடல்
நிற்கக் கருத்திடம் போதா தெனல் |
| 295. |
குன்று
லாவு கொடும்திறல் தென்றல்அம்
கன்று லாவிய கண்அகல் விண்எலாம்
சென்று லாவு திரைக்கடல் அன்னமால்
நின்று லாவஎன் நெஞ்சிடம் போதுமோ?
|
(இ
- ள்.) கண் அகல் விண் எலலம் சென்று உலாவு - இடம்
அகன்ற வானம் முழுதும் பரந்து உலவுகின்ற, திரைக் கடல் அன்னமால்
- அலைவீசுகின்ற கடல்போன்ற ஆசை, என் நெஞ்சு நின்று உலாவ -
என் மனத்தில் நிலைபெற்று நின்று எப்பொழுதும் பரவுதற்கு, குன்று
உலாவு கொடுந் திறல் தென்றல் அம் கன்று - பொதிகைமலையில்
உலாவுகின்ற காதலர்க்குக் கொடுந்திறமை புரிகின்ற அழகிய இளந்
தென்றல் காற்று, உலாவிய, உலாவுகின்ற, என் நெஞ்சு இடம் போதுமா
- என் நெஞ்சு இடம் போதுமா? போதாது.
ஓகாரம் : வினா. திரைக்கடல் இரண்டாம்வேற்றுமைத்தொகை.
தென்றற்காற்றினை உலாவுதலால் விலங்கெனக் கருதிக் கன்று என்றாள்.
தென்றல் உலவுகின்ற என் நெஞ்சு கடல்போன்ற மால் நின்றுலாவ இடம்
போதுமா? என்றாள். தென்றல் உலாவியபோது காமம் பெருகுகிறது :
காமம் பெருகியபோது தென்றலும் மிகுகின்றது. ஆதலால், இரண்டும்
உலாவுவதற்கு நெஞ்சில் இடமின்றி நெஞ்சம் பிளக்கின்றது; அதனால்
வருந்துகின்றேன் என்பது கருத்து.
(191)
| |
விடியா
விரவை வெறுத்துரைத்தல் |
| 296. |
போத
நோதக வாக்கியும் போகிலாய்
பாத நோதக வேபனிக் கங்குலே
சூத னோதமுற் றோன்றியும் இற்றைநாட்
காத னோதலும் கற்றிலை போலும்ஆல். |
(இ - ள்.)
பனிக் கங்குலே - பனியோடு கூடிய குளிர்ந்த இரவே,
போத நோதகவு ஆக்கியம் போகிலாய் - மிகவும் துன்பத்தை எனக்குக்
கொடுத்தும் நீ போகாதிருக்கின்றனை, பாதம் நோதகவே - அதற்குக்
|