|
காரணம் உனது கால்
நோதலோ? சூதன் - சூரியனுடைய தேர்ப்
பாகனாகிய அருணன், ஓதம் முன் தோன்றியும் - கடலில் உனக்கு
முன்னாலே தோன்றியும் நீ போகாமலிப்பதற்குக் காரணம் யாது?, இற்றை
நாள் - இன்று, காதல் நோதலும் கற்றிலை போலும் - என்னுடைய
காதற்றுன்பத்தையும் அறிந்துகொள்ளவில்லை போலும்.
கற்றிலை : எதிர்மறை முன்னிலை ஒருமை வினைமுற்று; போகிலாய்
: எதிர்மறை முன்னிலை ஒருமை வினைமுற்று, போ : பகுதி; கு : சாரியை;
இல் : எதிர்மறை இடைநிலை; ஆய் : முன்னிலை ஒருமை வினைமுற்று
விகுதி. இன்று + நாள் - இற்றைநாள். ஆல் : அசை. இரவெல்லாம்
வருத்திய காதல் நோய் இன்னும் தணியவில்லை என்பதாம். நோதகவு +
ஏ; ஏ : வினாப்பொருளை யுணர்த்தியது.
(192)
| |
'இரவு
விடிந்தால் எனக்கு நலம்' என்றல் |
| 297. |
நிரவும்
தென்றலும் நீள்விசும் பெங்கணும்
பரவும் திங்களும் பாய்திரை ஓதையின்
வரவும் போர்வின் மதனனும் போகிலா
இரவொன் றேகினெற் கியாரும்ஒப் பில்லையே. |
(இ - ள்.)
நிரவும் தென்றலும் - எங்கும் நிரம்பும் தென்றற்
காற்றும், நீள் விசும்பு எங்கணும் பரவும் திங்களும் - வானமுழுதும்
பரவும் நிலவொளியும், பாய் திரை ஓதையின் வரவும் - மோதுகின்ற
அலைமுழக்கின் வருகையும், போர் வில் மதனனும் - காதற்போர் புரியும்
கருப்புவில்லையுடைய மன்மதனும், போகிலா இரவு ஒன்று ஏகின் -
நீங்காத இந்த ஓர் இரவு கழியின், எற்கு யாரும் ஒப்பில்லை - நான்
அரிச்சந்திரனை அடைதலின் எனக்கு யாரும் நிகரில்லை.
ஏகாரம் :
ஈற்றசை; உம்மை : எண்ணும்மை தென்றல், திங்கள்,
கடலோதை, மன்மதன் இவ்விரவில் மிகவும் வருத்துகின்றன, இரா
விடிந்தால் துன்பம் நீங்கும் என்றாள் சந்திரமதி.
(193)
| |
'ஊழியோ
இரவு?' எனத் தோழியிடம் உரைத்தல் |
| 298. |
பூழி
சென்று புரண்டபொற் பாவையைத்
தோழி சென்று தெருட்டலும் தோழியை
ஆழி சென்றென் றடைந்தபின் எத்தனை
ஊழி சென்றஎன் றொண்நுதல் கேட்டனள். |
(இ
- ள்.) பூமி சென்று புரண்ட பொன் பாவையை -
அரிச்சந்திரன்மேல் வைத்த ஆசையால் புழுதியிற்போய்ப் புரண்ட பொன்
பாவை போன்ற சந்திரமதியை, தோழி சென்று தெருட்டலும் - அவள்
தோழி சென்று ஆற்றுவிக்கவும், ஒள் நுதல் - ஒளிபொருந்திய
நெற்றியையுடைய சந்திரமதி, தோழியை - தோழியை நோக்கி, என்று
ஆழி சென்று அடைந்தபின் - சூரியன் மேற்குக்கடல் போய் மறைந்த
பிறகு, எத்தனை ஊழி சென்ற என்று - எத்தனை ஊழிக் காலங்கள்
கழிந்தன என்று, கேட்டனள் - கேட்டாள்.
|