|
ஏகாரம்
: ஈற்றசை; வேய், வேலை, தீ, பேர், வாய் : பால்பகா
அஃறிணைப்பெயர்; வேய், வேலை, பேர் : ஆகுபெயர். எலாம் :
தொகுத்தல். வண் குமுதம் : பண்புத்தொகை. பொழுது புலர்ந்தது என்பது
குறிப்பு. அல்லிமலர் குவிவது முதலியவை அறிகுறிகள்.
(196)
| |
வைகறைச்
சிறப்பு |
| 301. |
காரி சங்கம்
துயில்எழக் கன்னிமால்
பாரி சங்கம் பொறுத்தது பார்க்கவே
வேரி சங்கம் எழுந்து முழங்கிட
வாரி சங்கள் மலர்ந்தன எங்குமே.
|
(இ
- ள்.) காரி சங்கம் துயில் எழ - கரிக்குருவிக் கூட்டங்கள்
உறக்கத்தினின்று எழுந்து ஒலிக்கவும், கன்னி மால் பாரி - பெண்ணாகிய
திருமாலின் மனைவியாகிய பூமிதேவி, சங்கம் பொறுத்தது பார்க்கவே -
தன்னிடம் வந்து தங்கிய அரசர் கூட்டங்களைத் தாங்கி யதைப்
பார்த்தற்பொருட்டு, ஏரி சங்கம் எழுந்து முழங்கிட - குளங்களிலுள்ள
சங்குகள் ஏழுந்து ஒலிக்கவும், வாரிசங்கள் எங்கும் மலர்ந்தன - தாமரை
மலர்கள் எல்லா இடங்களிலும் மலர்ந்தன.
காரி
சங்கம் - கரிக்குருவிக் கூட்டம். ஆனைச்சாத்தம் என்பதும்
அது. ஏரிச் சங்குகள் எழுந்து ஒலித்தன. "கீசுகீசு என்றெங்கும்
ஆனைச்சாத்தம் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ" என்றார்
ஆண்டாள் திருப்பாவையில். காரி சங்கம். ஏரி சங்கம் என்பன எதுகை
சந்தம் நோக்கி மிகாமல் இயல்பாய் நின்றன. வாரிசங்கள் - தாமரை
மலர்கள். பாரி - மனைவி. பூமி மன்னர் கூட்டத்தைத் தாங்கியிருப்பதைப்
பார்க்க . . . . . எழ, எழுந்து முழங்கிட மலர்ந்தன எனக் கூட்டுக.
(197)
| |
பரிதி
உதயச் சிறப்பு
|
| 302. |
கொல்வன்
ஆயினும் கோதையைச் சந்திரன்
வெல்வன் ஆயினும் மேல்அவ னைச்செயல்
சொல்வன் நான்என்று துண்ணெனச் செங்கதிர்ச்
செல்வன் ஆழிஅம் தேர்மிசைத் தோன்றினான் |
(இ - ள்.)
சந்திரன் - சந்திரன், கோதையை - சந்திரமதியை -
வெல்வன் ஆயினும் கொல்வன் ஆயினும் - வென்றாலும் கொன்றாலும்,
நான் அவனைச் செயல்மேல் சொல்வன் என்று - நான் அவனை அக்
கொடிய செயல் இனிமேல் செய்யலாகாது என்று சொல்லுவேன் என்று,
செங்கதிர்ச் செல்வன் - செந்நிறக் கதிர்களையுடைய சூரியன், ஆழி அம்
தேர்மிசைத் துண் எனத் தோன்றினான் - ஒற்றைச் சக்கரத்தையுடைய
அழகிய தேரின்மேல் விரைந்து தோன்றினான்.
சொல்வன் : தன்மை ஒருமை எதிர்கால முற்று; துண்
என :
விரைவுக்குறிப்பு இடைச்சொல்; செங்கதிர் : பண்புத்தொகை. கோதை -
|