பக்கம் எண் :


157

ஆய்ந்த நீதி அமைச்சரும் அவ்வவர்ச்
சேர்ந்த சேனையும் சேரவந் தீண்டின.

     (இ - ள்.) வேந்தர் ஈண்டினர் - அரசர்கள் வந்து கூடினார்கள்.
வேதியர் ஈண்டினர் - அந்தணர் வந்து கூடினார்கள், மாந்தர் ஈண்டினர்
- ஆடவர்கள் வந்து கூடினார்கள், மங்கையர் ஈண்டினர் - பெண்கள்
வந்து கூடினார்கள், ஆய்ந்த நீதி அமைச்சரும் - ஆராய்ந்துணர்ந்த
நீதியுடைய மந்திரிகளும், அவ்வவர்ச் சேர்ந்த சேனையும் - அவரவரைச்
சேர்ந்த சேனைகளும், சேர வந்து ஈண்டின - ஒருங்குவந்து கூடின.

     சொற்பொருட்பின்வருநிலை அணி; ஈண்டினர் என்ற சொல்லும்
நெருங்கினர் என்ற பொருளும் இக்கவியிற் பல இடங்களில் வந்தன
ஆதலின், மாந்தர் என்பது பொதுப்பெயர் ஆயினும் பின் மங்கையர்
என்று வருதலின் ஆடவரைக் குறிப்பா லுணர்த்தியது.
                                                   (201)

 
  சந்திரமதியைக் கூட்டிக்கொண்டு தோழியர்
   
      தோன்றல்
  
306. வாகை உற்ற மதன்ஒரு பால்வர
ஒகை உற்றுவண் டோலம்இட் டேவரப்
பாகை உற்ற பனிமொழிப் பைந்தொடித்
தோகை யைக்கொடு தோழியர் தோன்றினார்.

     (இ - ள்.) வாகை உற்ற மதன் ஒருபால் வர - வெற்றிபொருந்திய
மன்மதன் ஒருபக்கம் வரவும், வண்டு ஒகை உற்று ஓலம் இட்டு வர -
வண்டுகள் களிப்போடு இசை முரன்றுகொண்டே வரவும், பாகை உற்ற
பனிமொழிப் பைந்தொடித் தோகையைக் கொடு - தேன் பாகுபோன்ற
குளிர்ந்த சொற்களையும் பசும்பொன் வளையல்களையும் உடைய
மயிலன்ன சாயல் சந்திரமதியைக் கூட்டிக்கொண்டு, தோழியர்
தோன்றினார் - தோழிமார்கள் வந்து தோன்றினார்கள்.

     தோகை சினையாகுபெயராய் மயிலுக்காய்ப் பின் மயில்போன்ற
சந்திரமதிக் காதலின் இருமடியாகுபெயர். 'மதன் ஒருபால் வர' என்றது
சந்திரமதியை நோக்குவோர்க்குக் காதலை வளைக்க மதன் அடுத்து
வந்தான் என்ற குறிப்புத் தோன்றிற்று. காதலை விளைக்கும் தெய்வம்
காமனாதலால் அவன் வரவில்லையெனிற் காதல் எழாது என்று கருத்தில்
கொள்க.
                                                   (202)

 
  சந்திரமதி மாளிகை வாயிலை அடைதல்
307. அங்கை யில்பொலி சங்கினம் ஆர்த்தெழ
செங்க யல்கண் திருக்குழை யைப்பொரக்
கொங்கை என்றிரு குன்று சுமந்தெழின்
மங்கை மாளிகை வாயிலின் மேயினாள்.

     (இ - ள்.) அங்கையில் பொலி சங்கினம் ஆர்த்து எழ - அழகிய
கைகளிலே விளங்குகின்ற சங்கு, வளையல்கள் ஒலித்து எழவும், செங்கயல்
கண் திருக்குழையைப் பொர - சிவந்த மீன்போன்ற கண்கள் அழகிய
காதணிகளோடு பொருதவும், கொங்கை என்று இரு குன்று சுமந்து -