|
உலக
ஆடவரின் நிறையாகிய அச்சு இறுமென்று
தனங்களுக்குக்
கச்சுக் கட்டினர்
| 310. |
நச்சுக்
கட்டிய நல்அமு தும்மிக
வைச்சுக் கட்டிய மாமுலை யால்உல
கச்சுக் கட்டழி யும்அழி யும்எனக்
கச்சுக் கட்டி மறைத்தனர் கண்ணையே. |
(இ
- ள்.) நச்சுக் கட்டிய நல் அமுதும் மிக வைச்சுக் கட்டிய மா
முலையால் - நஞ்சும் கட்டிய நல்ல தேவாமுதமும் கலந்துவைத்துக்
கட்டப்பட்டது போன்ற சந்திரமதியின் பெருந் தனங்களால், உலகு அச்சுக்
கட்டு அழியும் அழியும் என - உலக ஆடவரின் நிறையாகிய அச்சு
நிலைகுலைந்து திட்டமாக முறிந்தே விடும் எனக் கருதி, கச்சுக் கட்டிக்
கண்ணை மறைத்தனர் - தனங்களுக்குக் கச்சுக்கட்டி அவற்றின் கண்களை
மறைத்தனர் (பாங்கியர்.)
"கடாஅக்
களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்."
இக்
குறளடிகளையும், 'தனங்களை மறையாவழி அவை கொல்லும்'
என்றெழுதிய பரிமேலழகர் உரையையும் ஒப்பு நோக்குக. நிறை
ஒழுக்கத்தின் நிறுத்துவதாகலின், அதனை அச்சாக உருவகஞ்செய்தார்.
தனங்களைப் பாரமாக உருவகஞ் செய்யாமையில் ஏகதேச உருவக அணி.
நச்சு : நஞ்சு என்பதில் வலித்தல் விகாரம்; மாமுலை : உரிச்சொற்றொடர்.
ஏகாரம் :
ஈற்றசை. வைச்சு : வைத்து என்பதன் போலி. அழியும்
அழியும் : அடுக்குத்தொடர்; இஃது உறுதிபற்றி வந்தது. உலகு :
ஆகுபெயர்.
(206)
| |
கண்ணொளியைக்
காதணி ஒளி தடுத்தல் |
| 311. |
ஆதி நூலும் அனைத்துல கும்கெடு
நீதி அன்றிவ ணீசெல்வ தென்னவே
காதி ஓடிய கண்களைக் காதுபோய்ச்
சோதி வார்குழை தொட்டு மறிக்கவே. |
(இ - ள்.)
ஆதி நூலும் - முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்
பழம்பொருளாகிய தமிழ் மறையும், அனைத்து உலகும் - அதன் நெறி
கடைப்பிடித்தொழுகும் உலக மக்களின் ஒழுக்கமும், கெடும் - நிலை
பேறின்றி அழியும், இவண் நீ செல்வது நீ தியன்று என்னவே - ஆதலின்
இங்கே நீ செல்வது நீதியல்ல என்றே, காதி ஓடிய கண்களை - மோதி
விரைவாகச் செல்லும் கண்களை, காது போய்ச் சோதி வார் குழை
தொட்டு மறிக்க - காதுகள் போய் ஒளிநிறைந்த குழைகள் தொட்டுத்
தடுக்க;
இச்செய்யுள் குளகம். உலகு : ஆகுபெயர். இயல்பாகக்
காதணி ஒளி
கண்ணொளியைத் தடுத்தலுக்கு உலகு ஒழுக்கம் காத்தற்பொருட்டுத்
தடுக்கிறதெனக் கவி தாம் கற்பித்த காரணத்தைக் கூறலின் இது
தற்குறிப்பேற்ற அணி. 'மறிக்க' என்ற செயவெனெச்சம் (காவணத்து)
எய்தினாள் (210) என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.
(207)
|