|
| 319. |
யானை
யும்பரி மாவும் இரதமும்
தேனை வென்ற திருமொழி மாதரும்
ஏனை நின்ற இருபிறப் பாளரும்
சேனை யும்திசை தோறும் செறிந்தவே. |
(இ
- ள்.) யானையும் பரிமாவும் இரதமும் - யானைகளும்
குதிரைகளும் தேர்களும், தேனை வென்ற திருமொழி மாதரும் - தேனின்
சுவையை வென்ற இன்மொழி பயிலும் பெண்களும், ஏனை நின்ற இரு
பிறப்பாளரும் - மற்றுமுள்ள பிராமணர்களும், சேனையும் - சேனைகளும்,
திசை தொறும் செறிந்த - திக்குகளிலெல்லாம் நெருங்கின.
ஏகாரம் :
ஈற்றசை. உம்மை, எண்ணும்மை. எல்லாத் திசைகளிலும்
யானை, பரி, தேர், மங்கையர், மறையோர், சேனைகள் நெருங்கி நின்றன
என்க. 'செறிந்த' என்னும் பலவின்பால் வினை முற்றினால் மாதர்
இருபிறப்பாளர் என்ற உயர்திணைப்பெயர்களும் முடிந்தன. இது
வழுவமைதி.
(215)
| 320. |
இமக்
குடங்கள் இரண்டு தனம்எனச்
சுமக்கு மென்கொடி சூட்டும் சுயம்வரம்
எமக் கெமக்கென எண்ணி வருமவர்
தமக்குப் பின்அரிச் சந்திரன் தோன்றினான். |
(இ - ள்.)
இமம் குடங்கள் என இரண்டு தனம் சுமக்கும் மென்
கொடி - பொற்குடங்களைப்போல இரண்டு கொங்கைகளைச் சுமக்கும்
மெல்லிய கொடிபோன்ற சந்திரமதி, சூட்டும் சுயம் வரம் - சூட்டுகின்ற
சுயம் வரம்; எமக்கு எமக்கு என எண்ணி வரும் அவர் தமக்குப் பின்
- எமக்கு எமக்கு என்று கருதி வருகிற ஏனையரசர்களுக்குப் பின்னர்,
அரிச்சந்திரன் தோன்றினான் - அரிச்சந்திர அரசன் தோன்றினான்.
மென் கொடி : பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த
அன்மொழித்
தொகை. எமக்கு எமக்கு : அடுக்கு பன்மைமேற்று.
(216)
சந்திரமதியின்
தோழிமார் அரசர்களை மணமகளுக்கு அறிவித்தல்
| 321. |
அன்ன
காலையின் அங்கைகள் நீட்டியே
கன்னன் மாமொழிக் காரிகை தோழிமார்
மன்னர் நாமமும் நாடும் வழிகளும்
இன்ன தின்ன தெனஎடுத் தோதுவார். |
(இ
- ள்.) அன்ன காலையின் - அந்தச் சமயத்தில், கன்னல்
மாமொழிக் காரிகை தோழிமார் - கரும்பு போன்ற இனிய மொழி
பயில்கின்ற சந்திரமதியின் தோழிமார், அங்கைகள் நீட்டி - தங்கள்
அழகிய கைகளை நீட்டி, மன்னர் நாமமும் நாடும் வழிகளும் இன்னது
இன்னது என - வந்திருக்கின்ற அரசர்களுடைய பெயரும் நாடும் குலமும்
இன்னது இன்னது என்று எடுத்துச் சொல்வாராயினர்.
கன்னன்
மொழி : உவமத்தொகை. மாமொழி : உரிச்சொற்றொடர்.
உம்மை, எண்ணும்மை.
(217)
|