பக்கம் எண் :


164

  'இங்கு இருப்பவன் சேரன்' எனத் தோழி கூறல்

  அறுசீர்க் கழிநெழிலடி ஆசிரிய விருத்தம்
  
322. அதிபார தனபார அதிரூப மலர்மானை
   அனையாய் இவன்
நதிபாய உயர்போதின் நறைபாய நிறையாத
   சிறை வாவியில்
மதியாமல் வலைபீறி வெடிபோன பருவாளை
   வளைபூ கமேல்
குதிபாய மாடல்கீறி விழுதேறல் கரைசாடு
   குடநா டனே.

     (இ - ள்.) அதி பார தன பாரஅதி ரூப மலர் மானை அனையாய்
- அதிகக் கனமுள்ள தனபாரங்களையும் பேரழகையும் உடைய தாமரை -
மலரில இருக்கும் இலக்குமியைப் போன்ற சந்திரமதியே, இவன் -
இவ்வரசன், நதி பாய - ஆறு பாயவும், உயர் போதின் நறை பாய -
சிறந்த மலர்களின் தேன் பாயவும், நிறையாத சிறை வாவியில் - நீர்
நிறையாத கட்டுக்குளங்களில், மதியாமல் வலை பீறி வெடி போன
பருவாளை - (வலைஞர்களின் வலையைப்) பொருட்படுத்தாமல் கிழித்துக்
கொண்டு துள்ளிப்பாய்ந்த வாளை மீனானது, வளை பூகமேல் குதி பாய -
வளைந்த குலைகளையுடைய பாக்கு மரத்தின்மேல் குதிக்கவும், மடல் கீறி
- பாளை பிறந்து, விழு தேறல் - விழுகின்ற தேன் பெருக்கானது, கரை
சாடு குடநாடனே - குளக்கரையை உடைக்கின்ற மேலநாட்டு மன்னனாகிய
சேரனாவான்.

     ஏகாரம் : தேற்றம். மான் : உவமையாகுபெயர். பரு வாளை :
பண்புத்தொகை; கரைசாடு : இரண்டாம்வேற்றுமைத்தொகை. சாடு
குடநாடன் : வினைத்தொகை.
                                                   (218)

 

   'சந்திரமதியே ! இங்கு இருப்பவன் பாண்டியன' எனத் தோழிகூறல்
  
323. இருணாறு நஞ்சொத்த விழியாய் துவண்டெய்த்த
   இடையாய் இவன்
சுருணாக பந்தத்தி னியல்பா மருஞ்சித்ர
   தொடிஏ வியே
முரணார மன்றிட்ட மகவா னெடுங்கொற்ற
   முடிசா டினோன்
சரணார விந்தத்து மகரால யந்துற்ற
   தமிழ் மாறனே.

     (இ - ள்.) இருள் நாறும் நஞ்சு ஒத்த விழியாய் - இருள் தோன்றும்
விடம்போன்ற கண்களையுடையவளே !, துவண்டு எய்த்த இடையாய் -
நெகிழ்ந்து இளைத்த இடையினையுடையவளே !, இவன் - இம் மன்னன்,
சுருள் நாக பந்தத்தின் இயல்பு ஆம் அரும் - சுருண்ட
பாம்புமண்டலத்தின் தன்மைபொருந்திய அருமையான, சித்ர தொடி ஏவி
- (சிவபெருமான்