பக்கம் எண் :


165

கொடுத்த) அழகிய வளை தடியை எறிந்து, முரண் ஆரம் அன்று இட்ட -
முற்காலத்தில் மாறுபட்ட (தாங்கமுடியாத) பொன்னாரத்தை மார்பிற்போட்ட,
மகவான் - இந்திரனுடைய, கொற்ற முடி சாடினோன் - அவன் முடியை
வீழ்த்தியவனும், சரண அர விந்தத்து - தன்னுடைய பாதமாகிய
தாமரைமலர்களில், மகராலயந் துற்ற - ஏழு கடலும் வந்து வணங்கிய,
தமிழ் மாறனே - தமிழ் நாட்டுப் பாண்டியமன்னன் காண்.

     ஏகாரம் : ஈற்றசை; பாண்டியரில் உக்கிரப்பெருவழுதி
இந்திரனுடைய முடியில் வளை ஏவி அவனை மகுடபங்கஞ் செய்தான்.
சுந்தர பாண்டியன் மலையத்துவசன் மனைவியாகிய தன் மாமியின்
பொருட்டு ஏழுகடலை வருவித்தான் என்பது வரலாறு. பெண்களின்
விழிகள் ஆடவரைக் காதல் நோயிலழுத்திக் கோறலின் விடம் ஒத்தன.

     "கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
     பேதைக் கமர்த்தன கண்"

என்ற குறட் கருத்தோடு ஒப்பிடுக.
                                                   (219)

 
    'இங்கு இருப்பவன் சோழன்' எனக் கூறல்
324. மலிவாச மலர்பூசி களிபாடு நறைஓதி
   மயிலே இவன்
ஒலியேறு திரைமோதும் உவர்ஆழி உலகேழும்
   உடனா கவே
வலியோர்கள் எளியோரை நலியாம லசையாத
   மனிவா யிலான்
புலிஏறு வடமேரு கிரிமீதி லிடுமீளி
   புனனா டனே.

     (இ - ள்.) வாசம் மலி மலர் பூசி - மணம் மிகுந்த பூச்சூடி, அளி
பாடும் - வண்டுகள் பாடுகின்ற, நறை ஓதி மயிலே - மணங்கொண்ட
கூந்தலுடைய மயில்போன்ற சாயலுடைய பெண்ணே! இவன் - இவ்வரசன்,
ஒலி யேறு திரை மோதும் உவர் ஆழி உலகு ஏழும் உடனாக - ஒலி
மிகுந்த அலை மோதும் கடல் சூழ்ந்த ஏழுலகையும் ஒருசேர,
வலியோர்கள் எளியோரை நலியாமல் - வலியவர்கள் எளியவர்களை
வருத்தாமல் காத்துவரும், அசையாத மணி வாயிலான் - அசையாத
ஆராய்ச்சி மணிகட்டிய அரண்மனைவாயிலை உடையவன், புலி ஏறு
வடமேரு கிரி மீதில் இடும் - தனது ஆண் புலிக்கொடியை வடமேரு
மலைமேல் எழுதியிட்ட, மீளி - ஆண்சிங்கம்போன்றவன், புனல் நாடனே
- நீர் நாட்டரசனாகிய சோழமன்னனே.

     அசையாத மணிவாயிலான் என்றது. சோழன் குடிகளுக்குக்
குறையின்றி ஆண்டமை விளங்கும்.
                                                   (220)