பக்கம் எண் :


166

     'இவ்வரசன் குருநாட்டரசன்' எனல்
325. விடமேவு கடல்போலும் அடல்நீடு கணைபோலும்
   விழிமா தராய்
வடமேரு கிரிபோலும் உயர்தேரி னிடைஏறி
   வருகோ மகன்
தடம்ஆடும் வடமாதர் தனபார நிகரான
   தடவா யிலார்
குடமேறி வளைஆர மணிஈனும் மணிமேவு
   குருநா டனே.

     (இ - ள்.) விடம் மேவு கடல் போலும் - நஞ்சுபொருந்திய கடல்
போன்ற, அடல் நீடு கணைபோலும் - வலிமிகுந்த அம்பு போன்ற, விழி
மாதராய் - கண்களையுடைய சந்திரமதியே !, வடமேரு கிரி போலும் -
வடக்கே இருக்கிற மகா மேருமலை போன்ற, உயர் தேரின் இடை ஏறி
வரு கோ மகன் - உயர்ந்த தேரின்மேல் ஏறி வருகின்ற அரச குமாரன்,
தடம் ஆடு மடமாதர் தனபாரம் நிகரான - குளங்களில் நீராடுகின்ற
மடந்தைப்பெண்களின் பெருந் தனங்களுக்கு ஒப்பான, தட வாயில் ஆர்
குடம் ஏறி - பெரிய வாயையுடைய குடங்களில் ஏறி, வளை ஆர மணி
ஈனும் - சங்குகள் முத்துகளாகிய மணிகளைப் பெறுகின்ற, அணிமேவு குரு
நாடனே - அழகுபொருந்திய குருநிலமன்னன் காண்.

     ஏகாரம் : தேற்றம்; நீராடும் மங்கையர் கரையில் வைத்திருக்கும்
குடங்களில் சங்குகள் ஏறி முத்துகளை யீனும் வளம் பொருந்திய குரு நாடு
என நாடு சிறப்பிக்கப்பட்டது.
                                                   (221)

 
  'சந்திரமதியே ! இவன் குகுரநாட்டரசன்' என்பதாம்
326.

முருகோடு புழுகோடு பணியோடு பிரியாத
   முலையாய் இவன்
பொருகோடு கொடுவாச மலர்சாடி இளமேதி
   புனல் பாயவே
ஒருகோடி கயலோட ஒருகோடி அளிஓட
   ஒருகோ டிவெண்
குருகோட ஒருகோடி சினவாளை கரைஏறு
   குகுரே சனே.

     (இ - ள்.) முருகோடு புழுகோடு பணியோடு பிரியாத முலையாய் -
மணத்தோடும் புனுகோடும் அணிகளோடும் நீஙகாத தனங்களை யுடைய
சந்தரமதியே !, இவன் - இங்கு இருக்கிற அரசன், இள மேதி -
இளமையான எருதுகள், பொருகோடு கொடு - போர்புரிகின்ற
கொம்புகளைக்கொண்டு, வாச மலர் சாடி - மணம் நிறைந்த பூக்களைக்
குத்திக் குலைத்து, புனல் பாய - தண்ணீரில் குதிக்கும்போது, ஒரு கோடி
கயல் ஓட - ஒரு கோடி கயல் மீன்கள் ஓடவும், ஒரு கோடி அளி ஓட -
ஒரு கோடி வண்டுகள் ஓடவும், ஒரு கோடி வெண் குருகு ஓட - ஒரு
கோடி வெள்ளை அன்னங்கள்