பக்கம் எண் :


168

தளைஏறு கின்றவயல் தனிலே எழுங்கமல
   தளமீ திலே
வளைஈனும் ஒண்தரள மதிபோல் எழும்கவுட
   வளநா டனே.

     (இ - ள்.) முளை ஏறு வண் கிரண இரு தோள் - மூங்கில்போல
நீண்டு அழகுநிறைந்த வளமான ஒளியையுடைய இரண்டு தோள்களை
யுடைய, நறுங் குதலை மொழி மாதராய் - நல்ல மழலை மொழி பேசும்
சந்திரமதியே !, உளை ஏறு திண் புரவி கரி சூழ - பிடரிமயிர்கள் நீண்ட
வலிமைபொருந்திய குதிரைகளும் யானைகளும் சூழ, இங்கு வரும் உயர்
தேரினான் - இங்கே வந்துள்ள உயர்ந்த தேரையுடைய இம் மன்னன்,
தளை ஏறுகின்ற வயல் தனிலே எழும் கமல தள மீதிலே - வரம்பு
உயர்ந்திருக்கும் வயல்களிலே மூளைத்தெழுந்த தாமரைமலர்களின்
இதழ்மீது, வளை ஈனும் ஒண் தரளம் - சங்குகள் ஈனுகின்ற
ஒளிபொருந்திய முத்துகள், மதி போல் எழும் - நிலவொளிபோல்
வெண்மையான குளிர்ந்த ஒளிமிகுவிக்கின்ற, கவுட வள நாடனே -
செழிப்பான கவுடநாட்டு மன்னனே.

     ஏகாரம் : தேற்றம். தேரினான் நாடனே என முடியம். தளை -
வரம்பு; தளம் - பூவிதழ், வரம்புயர்ந்த வயர்களில் முளைத்தெழுந்த
தாமரை மலரிதழ்மேல் சங்குகள் ஈன்ற முத்துகள் சந்திரனைப்போ
லொளிவீசும் என்பது நாட்டு வளம்.
                                                   (224)

  'சந்திரமதியே ! இவ்வரசன் சிந்துநாட்டரசன்' என்பதாம்
329. அரிசிந்து விழியாய்இ வணிதேரின் மிசைஏறி
  அடைகோ மகன்
விரிசிந்து வினைஉண்ட ஒருசிந்து முனிதங்கு
   கிரிசிந் துகால்
பொரிசிந்த அலர்புன்கு பொருள்சிந்த அலர்கொன்றை
   பொரிவண் டினம்
வரிசிந்த மகரந்த மலர்சிந்த வருசிந்து
   வளநா டனே.

     (இ - ள்.) அரி சிந்து விழியாய் - செவ்வரிபடர்ந்த கண்களை
யுடையவளே!, இ அணி தேரின் மிசை ஏறி அடை கோ மகன் - இந்த
அழகிய தேரிள்மேல் ஏறி இவ்விடத்தை அடைந்த அரசகுமரன், விரி சிந்து
வினை உண்ட - பரந்த கடலைக் குடித்த ஒரு சிந்து முனி தங்கு - ஒரு
குறள் வடிவமான முனிவராகிய அகத்தியர் தங்குகின்ற, கிரி சிந்து கால் -
பொதியமலை வீசுகின்ற தென்றல்காற்றினால், அலர் புன்கு - மலர்ந்த
புன்னை மரங்கள், பொரி சிந்த - பொரிபோன்ற பூக்களைச் சிந்த, அலர்
கொன்றை - அலர்ந்த கொன்றை மரங்கள், பொருள் சிந்த -
பொன்போன்ற கொன்றைப் பூக்களைச் சிந்தவும், பொரி வண்டினம் -
புள்ளிகளையுடைய வண்டுக்கூட்டங்கள், வரி சிந்த - பாட்டுகளைச்
சிந்தவும், மலர் மகரந்தம் சிந்த - பூக்கள் மகரந்தப்பொடிகளைச் சிந்தவும்,
சிந்து வரு வள நாடனே - சிந்துநதி பாய்கின்ற செழிப்பான
சிந்துநாட்டரசன்.