பக்கம் எண் :


17

பொருந்திய மணிகள் ஆற்றிற்செல்வது வானவில் பூமியில் வந்ததுபோலத்
தோன்றியது என்றார்.
                                                    (10)

  ஆற்றுக்கும் சிவபெருமானுக்கும் சிலேடை
       கலி விருத்தம்
25. ஆடு நாகமும் அத்திக ளும்வரை
ஆடு நாகமும் அத்திகை யேபுனல்
ஓடு நாகமும் உற்றிட லால்நதி
ஓடு நாகமும் ஏந்தியை ஒத்ததே.

     (இ - ள்.) (சிவபெருமான்) ஆடு நாகமும் அத்திகளும் வரையாள்
துன் ஆகமும் அத்தி கையே புனலோடு நாகமும் உற்றிடலால் -
படமெடுத்தாடுகின்ற பாம்புகளும் எலும்புகளும் மலைமகள் நெருங்கி
யமர்ந்திருக்கும் உடம்பும் கபாலம் ஏந்திய கையும் கங்கை நீரோடு
யானைத்தோலுடையும் பொருந்தியிருப்பதால் (சரயுநதி), ஆடு நாகமும்
அத்திகளும் வரை யாடும் நாகமும் அத் திகையே புனல் ஓடு நாகமும்
உற்றிடலால் - அசையும் புன்னை மரங்களும் அத்தி மரங்களும் வரை
யாடுகளும், குரங்குகளும் அத்திசையிற் புனலில் ஓடுகின்ற பாம்புகளும்
பொருந்தியிருப்பதால், நதி - அந்தச் சரயுநதியானது, ஓடும் நாகமும்
ஏந்தியை ஒத்தது - கையில் ஓட்டினையும் இமயமலையாகிய வில்லினையும்
ஏந்தியிருக்கும் சிவபெருமானை ஒத்துச் சென்றது.

     சிவபெருமானும் சரயுநதியும் ஒத்திருந்ததாகச் சிலேடை கூறியதால்,
இது சிலேடையணி : வரையாள் துன் ஆகமும் எனத் தகரத்திற் கினமாகிய
நகர வீறாகப் பிரிக்கப்பட்டது. மடக்கு, சிலேடை, மாலை மாற்று முதலிய
சொல்லணிகளில் னகரம் நகரத்தோடொத்து வருமாறு முன்னோர் செய்யுள்
செய்திருப்பது இலக்கியங்களிற் காண்க. "சலந்தரனாகந்தரித்தார்" என்ற பாடலில் இரண்டாம் அடியில் சலம் தரனாகம் தரை நடந்தால் என்பது
னாகம் நாகம் எனப் பொருள் படுவது காண்க. இரண்டடி மடக்கு என்னும்
சொல்லணி இக் கவி முதல் பதினொரு கவிவரை யமைத்திருக்கிறார்
ஆசிரியர்.
                                                     (11)

        சரயு ஆற்றின் ஓட்டம்
26. அம்ம டங்கலும் ஆழி கிளர்ந்தெழும்
அம்ம டங்கலும் ஒப்பதை அன்றதின்
மும்ம டங்கலும் வெல்லும் முதிர்கய
மும்ம டங்கலும் கொண்டு முடுகிற்றே.

     (இ - ள்.) அம் மடங்கலும் - அந்த வடவை முகத் தீயும், ஆழி
கிளர்ந்து எழும் அம் அடங்கலும் - கடலினின்று பொங்கி எழுந்து வரும்
நீர் முழுவதும், ஒப்பதை யன்று - (அச் சரயுநதியின் வேகத்திற்கு)
ஒப்பதன்று, அதின் மும்மடங்கலும் கொண்டு - அதனினும் மூன்று பங்கு
அதிகமான வேகத்தைக் கொண்டு, முதிர் கயமும் மடங்கலும் கொண்டு -
மூப்படைந்த