யானைகளையும், சிங்கங்களையும்
இழுத்துக் கொண்டு, முடுகிற்று -
விரைந்து சென்றது.
சரயு
நதியானது கடனீர் முழுவதும் கிளர்ந்து செல்வதினும் வடவைத்
தீயெழுந்து செல்வதினும் மும்மடங்கு வேகமாக யானைகளையும்
சிங்கங்களையும் இழுத்துக்கொண்டு சென்றது என்பது. அம் - நீர்.
மடங்கல் - ஊழ்த்தீ, சிங்கம். இரண்டடி மடக்கு என்னும் சொல்லணி.
அன்று என்பதனை அன்றி என்ற வினையெச்சத்தின் திரிபாகக் கொண்டு
அல்லாமல் எனவும் பொருள் கூறலாம்.
(12)
|
யாறு
யானை போன்றது |
27. |
முறியு மாறுந்
தருவும் முதல்கெட
முறியு மாறுந்தி முற்றிநல் மான்மத
வெறியு மாறடி யுங்கொடு வேகமும்
வெறியு மாறிலா வெங்களி றொத்ததே. |
(இ - ள்.)
முறியும் மாறும் தருவும் முதல் கெட முறியுமாறு உந்தி
- தளிர்களும் வளார்களும் மரங்களும் அடியோடு விழுந்து முறியும்படி
மோதித்தள்ளி. மான்மத வெறியும் மாறடியுங் கொடு - கத்தூரி மணமும்
பெரிய மரத்தடிகளையும் கொண்டுவருதலால், மால் மதவெறியும் மாறு
அடியுங் கொடு - மிகுந்த மதவெறியும் அதனால் மாறி மாறி வைக்கின்ற
காலடியுங்கொண்டு, வேகமும் வெறியும் மாறிலா வெங்களிறு ஒத்தது -
எப்போதும் விரைவும் வெறியும் நீங்காத கொடிய ஆண்யானையை
ஒத்திருந்தது.
யானையானது தளிர் வளார் மரங்களை வேருடன் முறிக்கும்,
சுற்றி
வளைக்கும். அதுபோலச் சரயுநதியும் தளிர்வளார் மரங்களை வேரோடு
முற்றி வளைத்தது. மான்மத நாற்றமுடையது யானை. சரயுநதியும் மான்மத
நாற்றமுடையது. மாறடி கொண்டது யானை, சரயுவும் மாறடி கொண்டது
எனச் சிலேடையாக்குக. மாறு அடியாவது அடித்தலம் மாறுவது. "ஆறிடு
மேடு மடுவும் போலாம் செல்வம்" என்ற செய்யுளிற் கூறுவதுபோல
ஒருபால் மேடாகவும் பள்ளமாகவும் ஆவதும் பின்னர் மேடாயிருந்த
இடம் பள்ளமாவதும் பள்ளமான இடம் மேடாகவும் மாறுபடுவதாம் எனக்
காண்க. இரண்டடி மடக்குஞ் சிலேடையும் வந்த கவி.
(13)
|
யாறு
கொற்றவை போன்றது |
28. |
வார ணத்தடங்
கோடும் வளைகளும்
வார ணத்தடங் கோடும் வரன்றிமே
ஆர ணத்துறை அந்தரி உண்மகிழ்ந்
தார ணத்துறை ஒத்ததவ் வாறரோ.
|
(இ - ள்.)
அ ஆறு - அந்தச் சரயுநதியானது, வாரணத்து அடு
அம் கோடும் - யானைகளினுடைய குத்திக் கொல்கின்ற அழகிய
தந்தங்களையும், வளைகளும் - சங்குகளையும், வார் அண் அத் தடங்
கோடும் - நீளம்
|