|
தலைக்கோலமும், நீங்காத
தேம் கோதையாய் - என்றும் நீங்காது மணமும்
நீ்ட்சியும் நிலைபெற்ற அழகிய கூந்தலையுடைய சந்திரமதியே!, கூம்பு ஒடி
வான் தோயும் சிகரமானது உயர்ந்து வானத்தைப் பொருந்தியுள்ள, ஈண்டு
மான் தேரில் ஆசை - கூர்ந்து ஏறினோன் - இவ்விடத்திற்குக் குதிரைகள்
பூட்டிய தேரில் மிகுந்த விருப்பத்தோடு ஏறிவந்தவன், தூம்பு ஓடு - ஏரி
மதகின் வழியாக, கூன் கோடு வார்ந்து ஓடி - வளைந்த சங்குகள் நெடுக
ஓடி, ஈன்று - முத்துகளைப் பெற்று, ஏரி தோய்ந்து ஏறவே - மற்றோர்
ஏரியில் பொருந்தி ஏற, காம்போடு சேம்போடு சேர்ந்து - காம்பு நீண்டுள்ள
நீர்ச்சேம்போடு சேர்ந்து, ஆரம் ஆர்ந்து ஓடு காந்தாரனே -
முத்துகளோடு சேர்ந்து நீர் ஓடும்படியான காந்தாரநாட்டு மன்னனே.
மான்
தேர் : இரண்டனுருபும் பயனும் உடன்தொக்கதொகை.
பூரப்பாளை என்பது, பாளை என முதல் குறைந்து நின்றது. பூரப் பாளை
என்பது தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு.
"வலம்புரிச் சங்கும் பூரப் பாளையும் தென்பல்லி வடபல்லியும்
தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலத்தை" சிலப். 6. 1018.
அடியார்க்கு நல்லாருரை காண்க.
(228)
| |
சந்திரமதிக்குக்
கலிங்க மன்னனைக் காட்டல் |
| 333. |
அடர்ந்தோடி
நெஞ்சம் கவர்ந்தே வரும்கண்
அணங்கே இவன்
தடந்தோறும் அங்கங் குழன்றூ னருந்தும்
சயம்கூர் கராத்
தொடர்ந்தோட எங்கும் கலைந்தோடி அஞ்சும்
சுணங் காழிநீர்
கடந்தோடி என்றும் கரும்பூ டுறங்கும்
கலிங் கேசனே. |
(இ - ள்.)
அடர்ந்து ஓடி நெஞ்சம் கவர்ந்தே வரும் கண்
அணங்கே - நெருங்கி ஓடி ஆடவர் உள்ளம் கவர்ந்து வருகின்ற
கண்களையுடைய தெய்வப்பெண்ணே!, இவன் - இம் மன்னன், தடம்
தோறும் அங்கு அங்கு உழன்று - குளங்களிலெல்லாம் அங்கங்கே
அலைந்து, ஊன் அருந்தும் - புலால் உண்ணுகின்ற, சயம் கூர் கரா -
வெற்றி பொருந்திய முதலை, தொடர்ந்து ஓட - பின் தொடர்ந்து செல்ல,
எங்கும் கலைந்து ஓடி அஞ்சும் சுணங்கு - எல்லா இடங்களிலும் கலைந்து
ஓடிப் பயப்படுகின்ற நீர் நாய்கள், ஆழி நீர் கடந்து ஓடி - ஆழமான
நீரைக் கடந்து ஓடி, என்றும் கரும்பு ஊடு உறங்கும் - எப்போதும்
கரும்புத்தோட்டங்களிலே படுத்து உறங்குகின்ற, கலிங்க ஈசனே - கலிங்க
மன்னனே.
கண் அணங்கு : இரண்டனுருபும் பயனும் உடன்தொக்கதொகை.
கலிங்க + ஈசன் - கலிங்கேசன் : குணசந்தி. தடந்தோறும் முதலைகிடக்கும்
அது தனக்ககப்பட்ட மீன் முதலிய புலால் உண்ணும். நீர் நாய்களையும்
தொடரும். அதற்கஞ்சி நீர் நாய்கள் ஓடிக் கரும்புத்தோட்டங்களின் நடுவிற்
படுத்துறங்கும் வளம் பொருந்தியது கலிங்க நாடு என்பது.
(229)
|