|
| |
சந்திரமதிக்கு
அவந்தி நாட்டரசனைக் காட்டல் |
| 334. |
இகழ்ந்திடு
மதன்புவி புரந்திட வளர்ந்தெழு
இளம்கொடி இவன்
நிகழ்ந்தஅர விந்தமணி தண்கழனி எங்கணும்
நிறைந்து நிரவப்
புகழ்ந்தகட வின்கன இருப்பன குளம்பிடை
புதைந்து முனையின்
அகழ்ந்துழு தடம்கொழு நெடும்தலை மடிந்திடும்
அவந்தி அரசே. |
(இ
- ள்.) இகழ்ந்திடும் மதன் புவி புரந்திட - ஞானிகள்
இகழ்கின்ற மன்மதன் இவ்வுலகினை ஆளும்படி, வளர்ந்து எழும்
இளங்கொடி - வளர்ந்து எழுகின்ற இளமையான கொடிபோன்ற
சந்திரமதியே!, இவன் - இவ்வரசன், நிகழ்ந்த அர விந்த மணி - நீரில்
உள்ள தாமரைகளில் தோன்றிய ஒளிபொருந்திய முத்துகள், தண் கழனி
எங்கணும் - குளிர்ந்த வயல்களில் எல்லாம், நிறைந்து நிரவ - நிறைந்து
பரவ, புகழ்ந்த கடவில் - புகழத்தகுந்த எருமைக்கடாவின், கன இரும்பு
அன குளம்பிடை புதைந்து - கனமான இரும்பு போன்ற குளம்புகளின்
இடையில் அழுந்திப் பதிந்து, முனையின் அகழ்ந்து - முனையினால்
ஆழமாக நிலத்தைப் பிளந்து, உழு தடங்கொழு நெடுந் தலை - உழுகின்ற
பெரிய கொழுக்களின் நீண்ட தலைப்பாகத்தால், மடிந்திடும் - உடைந்து
போகின்ற, அவந்தி அரசே - அவந்தி மன்னனேயாவன்.
மன்மதன்
உலகமக்களை மயக்கித் தனது அரசு செலுத்துவதற்குச்
சந்திமதியின் கொடி போன்ற மேனி துணை புரிகின்றது என்பதாம்.
எங்கணும் : உம்மை முற்றும்மை. அன : உவம உருபு. தடம் கொழு :
உயிர்ச்சொற்றொடர் கடா என்பது குறியதன்கீழ் ஆக் குறுகிக் கட
என்றாகி உகரம் ஏற்றுக் 'கடவு' என்றாயது.
(230)
| |
சந்திரமதிக்கு
மத்திர மன்னனைக் காட்டல் |
| 335. |
புத்தமுதம்
ஒத்தமொழி வெற்பைநிகர் ஒத்ததன
பொற்றொடி இவன்
சுத்தநிபு ணக்குசலர் சொற்கரிவ ழுக்கரிய
சுத்தநெ றியான்
முத்தணிந கைச்சியர்த னத்திடைதி மிர்த்தெறி
முழுக்கல வையில்
மத்தகர டக்கரி வழுக்குறு தெருச்செறியும்
மத்திரா பிரான். |
(இ - ள்.)
புத்தமும் ஒத்த மொழி - புதிய அமுதம் போன்ற
மொழியையும், வெற்பை நிகர் ஒத்த தன - குன்றுகளை முற்றிலும்
ஒத்திருக்கும் தனங்களையும் உடைய, பொற்றொடி - பொன்னாலாகிய
|