|
வளையல்களை யணிந்த
சந்திரமதியே!, இவன் - இவ்வரசன், சுத்த நிபுணக்
குசலர் - குற்றமற்ற தூய நூலறிவில் வல்லவர்கள், சொல் கரி -
சொல்லுகின்ற நீதிச் சான்றுகளினின்றும், வழுக்கு அரிய சுத்த நெறியான்
- விலகுதலில்லாது தூய ஒழுக்கநெறி கடைப்பிடித்தவன், முத்தணி
நகைச்சியர் - முத்துப் போன்ற அழகிய பற்களையுடைய பெண்களின்,
தனத்திடை திமிர்ந்து எறி - கொங்கைகளில் நிரம்பப் பூசப்பெற்று
வழிவதால் வழித்து எறிந்த, முழுக் கலவையில் - நிறைந்த மணமுள்ள
கலவைச் சேற்றில், மத்த கரடக் கரி வழுக்குறு - மதச் சுவடு பொருந்தி
யானைகள் நடக்கும்போது வழுக்குகின்ற, தெரு செறியும் - தெருக்கள்
நிறைந்த, மத்திரர் பிரான் - மத்திரநாட்டு மன்னன்.
பொற்றொடி
: மூன்றாம்வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை. அருமை : இன்மைமேற்று. நிபுணக் குசலர் -
அறிவில் வல்லவர்.
(231)
| |
சந்திரமதிக்கு
மச்சவள நாட்டரசனைக் காட்டல் |
| 336. |
கருமச்ச
மனைஒத்த சொலைவைத்த விழிபெற்ற
களிமா தராய்
பெருமச்ச மருமிக்க இரதத்தி னிடையுற்ற
பெருமான் இவன்
இருமச்ச நயனத்தர் முலை முத்தில் விழும்அச்ச
இடை இற்றென
வருமச்சம் அலர்தற்ப மனம்அச்ச முறும்மச்ச
வளநா டனே. |
(இ - ள்.)
கருமச் சமனை ஒத்த - உடல் உயிரைச் கூறுபடுத்துந்
தொழிலுடைய கூற்றுவன் போன்ற. கொலை வைத்த விழி பெற்ற -
கண்டார் அறிவைக் கொல்லுந் தொழில் வைத்த கண்களையுடைய, களி
மாதராய் - யாவர்க்கும் மகிழ்வு விளைக்கும் சந்திரமதியே!, இவன் -
இவ்வரசன், பெரு மச்சு அமரும் - பெரிய அச்சுப்பொருந்திய உயர்ந்த,
மிக்க இரதத்தினிடையுற்ற பெருமான் - பெரிய தேரில் இருந்து வரும்
பெருமை வாய்ந்தவன், இரு மச்ச நயனத்தர் - இரண்டு மீன்கள் போன்ற
கண்களையுடையவர், முலை முத்தில் விழும் அச்ச இடை - தனங்களில்
அணிந்த முத்துமாலைகளின் கனத்தால் விழுந்து விடுமென அஞ்சத்தக்க
ஒடுங்கிய இடை. இற்று என - இத்தன்மையது என்று, வரும் அச்சம் -
வருகின்ற பயம். அலர் தற்பம் - விரிந்த படுக்கையிலும், மனம்
அச்சமுறும் - மகிழ்ந்து மனநடுங்குகின்ற, மச்ச வள நாடனே - வளமிக்க
மச்சநாட்டு மன்னனே.
"பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு"
என்பது திருக்குறள்.
இற்று : குறிப்புவினைமுற்று. "நீலுண் துகிலிகை கடுப்ப"
என்பதில்
நீலம் என்பது நீல் எனக் குறைந்தவாறு. நயனம் : தொகுத்தல். சமன் உயிர்
யாவற்றையும் ஒப்ப நோக்குதல் பற்றி யமனுக்குக் காரணப்பெயராய் வந்தது.
பெருமை + அச்சு - பெருமச்சு. அச்சு + அமரும் = அச்சமரும். மச்சம் +
நயனம் = மச்சநயனம் - மச்சம் போன்ற நயனம் : உவமைத்தொகை.
(232)
| |
சந்திரமதிக்குக்
கேகய மன்னனைக் காட்டல் |
| 337. |
கடனாகம்
ஒருகோடி வயவாசி பலகோடி
கடல் போலவே
உடனாக வரமேக வளவாய ஒருதேரி
னுறுகோ மகன்
விடனாக மடல்பூக விரிபாளை எனநாணி
வெளி மேய்கிலா
மடனாக மிசைதோகை மயிலேறி மலர்ஊடு
மறைகே கயன். |
(இ
- ள்.) கடன் நாகம் ஒரு கோடி - மதத்தினையுடைய யானைகள்
ஒரு கோடியும், வயவாசி பல கோடி - வேதமிக்க குதிரைகள் பல
கோடியும், கடல்போல உடனாக வர - கடல்போலக் கூடவர, மேக
அளவாய ஒரு தேரின் உறு கோ மகன் - மேகமண்டலம் அளவு உயர்ந்த
ஒரு தேரினேறி வரும் இவ்வரசன், மடன் நாக மிசை தோகை மயில் -
இளமையான பாம்புகளைக் கொத்தித்தின்னும் கலாப மயில்கள், மடல் பூக
விரி பாளை - மடலையுடைய கமுகமரத்தில் விரிந்திருக்கின்ற பாளையை,
விட நாகம் என நாணி - விடத்தையுடைய நாகப் பாம்பு என நினைந்து
அருகில் சென்று பாளை எனக் கண்டு வெட்க முற்றுப் பின்னர், தேறி -
தெளிந்து, வெளி மேய் நிலா - வெளியில் வந்து மேயாமல், மலர் ஊடு
மறைவ - மலர்களின் மத்தியில் மறைகின்ற வளம்பொருந்திய, கேகயன் -
கேகயநாட்டு மன்னன்.
இதில்
அமைந்த அணி மயக்க அணி. பாளையை நாகமென மயங்கிக்
கொத்தி நாகமல்லவென்று கண்டு வெளிவர நாணி மயில் மலரூடு மறையும்
எனக் கூறுவதால் நாகத்தைக் கொத்துவதற்காகங் பாக்குமரம் ஏறி
நாகமின்னை கண்டு நாணத்தால் மறைகிறது மயில். வெளியில் வர
வெட்கமுற்று மலர்க்குள் மறைந்தது என்பது கருத்து. கடம் - கடன்,
விடம் - விடன், மடம் - மடன் : இவை மகரத்திற்கு னகரம் போலியாய்
வந்த சொற்கள். கடன் - மதம்; விடன் - நஞ்சு; மடன் - இளமை,
அறியாமை. கடன் + நாகம் = கடனாகம். விடன் + நாகம் = விடனாகம்;
மடன் + நாகம் = மடனாகம்; உடன் + ஆக = உடனாககூட மடனாக
மிசை தோகை மயில், பூகமடல் விரி பாளைவிடனாக மென, நாணி, தேறி,
வெளிமேய்கிலா மலரூடு மறை எனக் கூட்டுக.
(233)
| |
'இவன்
கோசல நாடன் அரிச்சந்திரன்' எனல் |
| 338. |
வாடிவிழு
நூலும்இரு மால்வரையும் நேர்இடையும்
மாமுலை யுமாச்
சூடிமிக வானிழிய ஞாலம்விளை யாடிவரு
தோகை மயிலே |
|